சித்தார்த் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகர் பின்னணி பாடகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். 2003 ஆம் ஆண்டு பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகராக மட்டுமல்லாமல் உதவி இயக்குனராகமும் பணிபுரிந்தார் சித்தார்த். தொடர்ந்து ஆயுத எழுத்து படத்தில் நடித்தார். பின்னர் தெலுங்கு சினிமாவில் நடிக்க தொடங்கினார் சித்தார்த்.
நீண்ட காலம் தெலுங்கு சினிமாவில் பணியாற்றி புகழ் பெற்ற பிறகு 2014 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு திரும்பினார் சித்தார்த். அந்த ஆண்டு ஜிகர்தண்டா திரைப்படத்தில் நடித்தார். பின்னர் காவியத்தலைவன், எனக்குள் ஒருவன், ஜில் ஜங் ஜக், சிகப்பு மஞ்சள் பச்சை, காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு, அரண்மனை 2, இந்தியன் 2, அருவம் போன்ற திரைப்படங்களில் நடித்தார் சித்தார்த்.
2023 ஆம் ஆண்டு சித்தா என்ற திரைப்படத்தில் நடித்து அந்த படத்தை தயாரிக்கவும் செய்தார். சித்தா திரைப்படம் விமர்சன ரீதியாக அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது. அடுத்ததாக இந்தியன் 3 மற்றும் பலப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் சித்தார்த். இவர் நடிகை அதிதி ராவை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் விகடன் நேர்காணலில் கலந்து கொண்ட சித்தார்த் அவர்களிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் அவர் தான் நடித்த 3 bhk படத்தை பற்றி பகிர்ந்து இருக்கிறார். அதில் சரத்குமார் சாரும் தேவயானி மேடமும் அமைந்தது மிகப்பெரிய நல்ல விஷயம். சூரியவம்சம் ஜோடி அப்படியே இந்த படத்திற்கும் பொருந்தி விட்டது. அவர்கள் ஜோடி எப்போதுமே பொருத்தமாகத்தான் இருக்கும் என்று கூறியிருக்கிறார் சித்தார்த்.