மனிதர்களில் இத்தனை நிறங்களா என்பது வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை அடையும்போது தான் தெரியும். நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் கூட யார் இவர்கள்? எப்படிப்பட்டவர்கள்? எந்த நோக்கத்திற்காக நம்மிடம் பழகுகிறார்கள் என்பது தெரியும். சுயநலம் எது? பொது நலம் எது?
ஒருவர் நம்மை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்? எப்படி எல்லாம் அவமானப்படுத்துகிறார் என்பது கூட தெரியும். இல்லாவிட்டால் எதற்கெடுத்தாலும் நாம் சிரித்துக் கொண்டே இருப்போம். அவர்களும் நம்மைக் கோமாளி ஆக்கி விடுவார்கள். கடைசியில் நம் மனவேதனையில் அச்சச்சோ என்று அவர்கள் குளிர் காய்வார்கள்.
உதவி என்ற பெயரில் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடுவதாலே பிரச்சினைகள் உருவாகிறது! புரிந்து கொள்ளப்படாததை விட வேதனையானது…தவறாய் புரிந்து கொள்ளப்படுவது. சற்று மெதுவாகவே பயணியுங்கள். காலம் கடந்து விட்டபின் பிடித்த சிலவற்றை மட்டுமல்ல, சில மனிதர்களையும் மீண்டும் பார்க்க முடியாமலே போகலாம்.
சில தருணங்களை சிரித்துக் கொண்டே கடந்து விடுங்கள், விவாதமும் வேண்டாம் விளக்கமும் வேண்டாம். துன்பத்தைச் சந்தித்தால் தான் பொறுமைக்கு வழி தெரியும். அவமானத்தைச் சந்தித்தால் தான் உறுதியான வாழ்க்கைக்கு வழி தெரியும்.
பசியை சந்தித்தால் தான் உணவின் அருமை தெரியும்.தோல்வியை சந்தித்தால் தான் வெற்றிக்கு வழி தெரியும். சிலரால் இவ்வளவு தான் யோசிக்க முடியும் எனும் போது அவர்களை அப்படியே விட்டு விடுங்கள்;மன வளர்ச்சி வேறு…அறிவு வளர்ச்சி வேறு.பிறர் பார்வைக்கு பிழையாய் இருப்பது கண்டு வருத்தம் வேண்டாம். மற்றவர்கள் பிழையாய் கருதுவதை எல்லாம் திருத்தம் செய்ய நாம் இங்கு பிறக்கவில்லை