கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் நடைபெற்று வந்த ஒரு வீட்டு கட்டுமான இடத்தில், இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த ஒரு தொழிலாளியை, அங்கு இருந்த ஒப்பந்தக்காரர் தனது கைகளில் பிடித்து காப்பாற்றினார். இந்த விழும்-மீட்பு சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் தொழிலாளி சங்கர் மற்ற நால்வருடன் சேர்ந்து ஒரு கான்கிரீட் ஜன்னல் மேல் நின்று கொண்டு பணிபுரிந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத வகையில் தவறி விழுந்தார். அப்போது மாடியின் கீழே இருந்த ஒப்பந்தக்காரர் கணேஷ், சங்கர் விழுவதை பார்த்ததும் ஓடி சென்று அவரை பிடித்தார். இதில் இருவரும் கீழே இருந்த கட்டுமான பொருட்கள்மீது விழுந்தனர்.
முந்தைய முதுகு வலியால் பெல்ட் அணிந்து பணிபுரிந்து வரும் கணேஷுக்கு, அவரது வலது காலில் சிறிய தசை பிடிப்பு ஏற்பட்டது. ஆனால் சங்கர் எவ்வித காயமும் இல்லாமல் மீண்டு, அன்று மீதமுள்ள நேரம் முழுவதும் தனது பணியை தொடர்ந்தார்.
கணேஷ் கடந்த 25 ஆண்டுகளாக கட்டிடத் துறையில் பணியாற்றி வருகிறார். அந்தப் பணிகளில் 24 ஆண்டுகள் சங்கர் அவருடன் இணைந்து பணிபுரிந்துள்ளார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு கணேஷ் கூறியதாவது: “நான் அந்த சம்பவத்தில் இயல்பாகவே நடந்து கொண்டேன். எங்களுக்குத் துயரமான விஷயம் நடக்காமல் தப்பியதற்காக கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்” என்றார்.
https://x.com/aykiricomtr/status/1928139205202313343