உலக அளவில் குழந்தை வளர்ப்பு என்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எல்லா நாட்டிலும் குழந்தை வளர்ப்பு என்பதைப் பற்றி பல விவாதங்கள் கூட நடைபெறும். ஆனால் தற்போது 30 சதவீத பேரண்டிங் என்ற ஒரு விஷயம் பிரபலமாகி வருகிறது. அது என்ன 30 சதவீத பேரன்டிங், குழந்தை வளர்ப்பு என்றாலே பெற்றோர்கள் 100% தானே தரவேண்டும். அது என்ன என்பதை பற்றி இனி காண்போம்.
பொதுவாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறந்ததை சொல்லித் தர வேண்டும் அவர்கள் எல்லா விதத்திலும் சௌகரியமாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அவர்கள் எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் என்ன ஒரு பழக்கத்தை பழக்க வேண்டும் என்றாலும் தங்களது 100% உழைப்பை தர வேண்டும் என்று பெற்றோர்கள் நினைப்பார்கள். ஆனால் அது தவறு என்று கூறப்படுகிறது. 30 சதவீதம் பேரண்டிங் எனப்படுவது உங்கள் குழந்தைகளை நீங்கள் சரியான முறையில் வழி நடத்துதலுக்கு உண்டான ஒரு சரியான விகிதமாகும். இது தொடர்ச்சியாக தினமும் செய்வதை குறிக்கும். ஏதோ ஒரு நாள் பிள்ளைகளிடம் தங்களது 100 சதவீதையும் தருவதை விட தினமும் அவர்களிடம் 30 சதவீதம் அறிவு சார்ந்த விஷயங்கள் மற்ற விஷயங்களை பகிர்வது போதுமானது என்று கூறப்படுகிறது.
அப்படி என்றால் மீதி 70 சதவீதத்தை எப்படி குழந்தைகள் பெற்றுக்கொள்வார்கள் என்றால் அவர்கள் சுற்றுசூழல் மூலமாகவும் தங்களுடைய அறிவின் மூலமாகவும் பெற்றுக் கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் குழந்தைகளுக்கு அனைத்தையும் நாம் சொல்லித் தந்து விட்டால் அவர்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் இருக்கும் எதிர்மறையான விஷயங்கள் தெரியாமல் கூட போகலாம். அதனால் அவர்களே அதை அறிந்து தெரிந்து கொள்ளட்டும் என்ற நோக்கில் தான் 30 சதவீதம் பேரண்டிங் தொடர்ச்சியான பேரண்டிங் என்று கூறப்படுகிறது.
30 சதவீத பேரண்ட்டிங்கை நாம் தொடர்ந்து செய்தாலே குழந்தைகள் ஆரோக்கியமான உளவியல் மேம்பாட்டுடன் வளர்வார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் அவர்களே பிரச்சனைகளை கையாள்வது போன்ற பயிற்சிகளை பெற்றுக் கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. அதனால் தற்போது இந்த 30 சதவீத பேரண்டிங் என்பது பிரபலமாகி கொண்டு வருகிறது.