ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா.. ரீல்ஸ் வீடியோவுக்கு டான்ஸ் ஆடிய பெண்ணை ஓங்கி உதைத்த குதிரை.. வீடியோ வைரல்..!

அழகிய மலைகள் சூழ, பரந்து விரிந்த ஒரு பசுமையான வயல்வெளி. புகைப்படங்கள் எடுக்கவும், வீடியோக்கள் எடுக்கவும் இதுவொரு அலாதியான இடம். ஆனால், இந்த அழகுக்கு நடுவே நடந்த ஒரு எதிர்பாராத சம்பவம், அனைவரையும் திடுக்கிட…

horse

அழகிய மலைகள் சூழ, பரந்து விரிந்த ஒரு பசுமையான வயல்வெளி. புகைப்படங்கள் எடுக்கவும், வீடியோக்கள் எடுக்கவும் இதுவொரு அலாதியான இடம். ஆனால், இந்த அழகுக்கு நடுவே நடந்த ஒரு எதிர்பாராத சம்பவம், அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது.

நேபாளத்தின் குரி கிராமத்தை சேர்ந்த அவிப்ஷா கானல் என்ற சமூக வலைதள பிரபலம், அங்கு ரீல் பதிவு செய்து கொண்டிருந்தபோது, திடீரென ஒரு குதிரை அவரை தாக்கியது. இந்த அதிர்ச்சி வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர, அது தற்போது காட்டுத்தீயாக பரவி வருகிறது.

அருகில் அமைதியாக மேய்ந்து கொண்டிருந்த ஒரு குதிரை, எதிர்பாராத விதமாக ஆத்திரமடைந்து அவிப்ஷாவை நோக்கி பாய்ந்தது. வீடியோவில், அவிப்ஷா அழகான பின்னணியில் பிரபலமான ஷேக்கி பாடலுக்கு நடனமாடி கொண்டிருக்கிறார். அடுத்த சில நொடிகளிலேயே, குதிரை அவரை நோக்கி வேகமாக ஓடிவந்து தாக்க முயல்கிறது. முதல் தாக்குதலை அவிப்ஷா தடுத்தாலும், குதிரை அவரை உதைத்து தரையில் தள்ளுகிறது. நல்லவேளையாக, அவருக்கு பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை.

இந்தச் சம்பவம் இன்ஸ்டாகிரிராம் ரீல் பதிவு செய்து கொண்டிருந்தபோது நிகழ்ந்ததாகவும், தனது மாமா தான் வீடியோ எடுத்ததாகவும் அவிப்ஷா தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார். மேலும், தனது பின்தொடர்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து, “கவனமா இருங்க நண்பர்களே; விலங்குகளிடமிருந்து தள்ளியே இருங்க. என்னை போல காயப்படலாம்,” என்று பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ வெளியான உடனேயே வைரலானது. நடிகை ரிதிமா பண்டிட் உள்ளிட்ட பல பிரபலங்களும் இதற்கு சிரிக்கும் எமோஜிக்களுடன் கமெண்ட் செய்துள்ளனர்.

இணையவாசிகள் மத்தியில் இந்த வீடியோ பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது. ஒருவர், “அந்தப் பெண் ஏன் ஓடவில்லை?” என்று கேட்க, மற்றொருவர், “தப்பிக்கும் உள்ளுணர்வு சுத்தமாக இல்லை! அவள் தன் விதியை ஏற்றுக்கொண்டாள்!” என்று கருத்து தெரிவித்தார்.
சிலர் நகைச்சுவையாக, “குதிரை இப்படி சொல்வது போல இருக்கு: ‘ரீல் எடுக்கும் முன் ஏன் என் அனுமதி கேட்கலை?'” என்று எழுதினர். அவிப்ஷாவின் பின்தொடர்பவர்களில் பலர் அவருக்கு காயம் ஏற்பட்டதா என்று கவலை தெரிவித்தனர். இந்த வைரல் சம்பவம் குறித்து அவிப்ஷா அடுத்த ஒரு வீடியோவில் விளக்கமளித்தார். அதில், “நான் இப்போது ரொம்பவே பயந்துட்டேன். இனி ஒருபோதும் குதிரை முன்னால் போகவோ, அதன் மேல் உட்காரவோ மாட்டேன்,” என்றார். மேலும், தனது பின்தொடர்பவர்களின் ஆதரவுக்கும், வீடியோவை அதிக பார்வைகள் மற்றும் லைக்குகள் பெற உதவியதற்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் நடந்தபோது அவிப்ஷா தனது குடும்பத்தினருடன் விடுமுறையில் இருந்ததாக பகிர்ந்துள்ளார். ஒரு நாள் காலை, அழகான காட்சிகளைக் கண்டு ரசிப்பதற்கும், புகைப்படங்கள், வீடியோக்கள் எடுப்பதற்கும் அந்த இடத்திற்கு சென்றிருக்கிறார். ரீல் பதிவு செய்து கொண்டிருந்தபோது, குதிரை எதிர்பாராத விதமாக ஆக்ரோஷமாகி, தனது பின் காலால் அவரை உதைத்துள்ளது. இந்த வீடியோ பதிவேற்றப்பட்டதிலிருந்து 18.7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று, பெரும் வைரல் ஹிட் ஆகி உள்ளது

https://www.instagram.com/reel/DKuDPsgSAWN/?utm_source=ig_web_copy_link