இந்திய ராணுவம் பாகிஸ்தானின் விமான தளங்களை ஒரே ஒரு நிமிடத்தில் ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையால் அழித்தது என்றும், புதிய இந்தியாவின் வலிமையை நிரூபித்துள்ளோம் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று பீஹாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் மரணத்திற்கு பழிவாங்குவதாக வாக்குறுதியளித்ததாகவு, அந்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளதையும் குறிப்பிட்ட பிரதமர் மோடி பயங்கரவாத தலைமை மையங்களை மண்ணோடு மண்ணாக மாற்றிவிட்டோம்” என்றார்.
“பயங்கரவாதிகள் ஊடுருவ தாராளமாக அனுமதித்த பாகிஸ்தான் ராணுவத்தை, நம்முடைய ராணுவம் ஒரு நிமிட தாக்குதலால் மண்டியிட செய்தது. நிமிடங்களில் பாகிஸ்தானில் உள்ள பல விமான தளங்களும் பயங்கரவாத முகாம்களும் அழிக்கப்பட்டன. இதுவே புதிய இந்தியா, இதுவே அதன் சக்தி,” என்று அவர் உரையாற்றினார்.
“பஹல்காம் சம்பவத்திற்குப் பிறகு இரண்டு நாட்களில் நான் பீஹாருக்கு வந்து, பயங்கரவாத முகாம்கள் மண்ணாகப்படும் என்று நாட்டுக்கு உறுதியளித்தேன். அவர்கள் யோசிக்க முடியாத தண்டனையை சந்திப்பார்கள் என்றேன். இன்று மீண்டும் பீஹாரில் நின்று சொல்கிறேன், நான் என் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளேன்.
நம்முடைய சகோதரிகளின் சிந்தூரை அழித்தவர்களின் முகாம்களை நம்முடைய ராணுவம் அழித்துவிட்டது. பாகிஸ்தானும் உலகமும் இந்த சிந்தூரின் சக்தியை பார்த்துவிட்டன,” என்றார் பிரதமர் மோடி.