ஆளில்லா வீட்டில் திருடுவது எப்படி? 16 வயது மகனுக்கு பாடம் நடத்திய திருடன் கைது..!

  பெங்களூருவில் 35 வயது ஒரு திருடன் மூன்று மனைவிகளையும் ஒன்பது பிள்ளைகளையும் காப்பாற்ற திருட்டு தொழிலில் ஈடுபட்டதோடு, தன்னுடைய 16 வயது மகனுக்கும் எப்படி திருட வேண்டும் என கற்று கொடுத்ததாக கூறப்படுவது…

பழமொழி

 

பெங்களூருவில் 35 வயது ஒரு திருடன் மூன்று மனைவிகளையும் ஒன்பது பிள்ளைகளையும் காப்பாற்ற திருட்டு தொழிலில் ஈடுபட்டதோடு, தன்னுடைய 16 வயது மகனுக்கும் எப்படி திருட வேண்டும் என கற்று கொடுத்ததாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எலக்ட்ரானிக்ஸ் சிட்டி போலீசார் தொடர்ச்சியான திருட்டுக்களுக்கு பபாஜான், என்பவரை கைது செய்துள்ளனர். இதில், அவர் 16 வயது மகனையும் குற்றத்தில் ஈடுபடுத்தியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. வேலைவாய்ப்பு இல்லாத பபாஜான், தனது பெரிய குடும்பத்தை காப்பாற்ற திருடியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

போலீசார் இதுகுறித்து கூறியதாவது, பபாஜான் அதிக நாட்கள் பூட்டியிருந்த வீடுகளை இலக்கு வைத்து, குறிப்பாக அந்த வீட்டின் அருகில் உள்ள பெண்களிடம் பேச்சு கொடுத்து பூட்டியிருந்த வீட்டில் உள்ளவர்கள் குறித்து முதலில் விசாரித்து அதன்பின் திருட்டை நடத்தியதாக தெரிகிறது. ஆனால் சிசிடிவி புகைப்படங்களை வைத்து போலீசார் அந்த திருடனை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

ஒரு கட்டத்தில் அந்த திருடன் தனது மகனுக்கும் தொழிலை சொல்லி கொடுத்துள்ளார். கடந்த மே 7 அன்று, அப்பா மகன் சேர்ந்து 56 வயது ஒரு பெண்ணின் வீட்டில் ரூ.4.6 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடியதாக போலீசார் தெரிவித்தனர். ரோஜம்மா என்ற அந்த பெண் துணி துவைத்து ஆடைகளை உலர வைக்க மாடிக்கு சென்றபோது, தரைதளம் கதவை திறந்து வைத்திருந்தார். பபாஜான் மகனுக்கு உள்ளே செல்ல சிக்னல் கொடுத்தார்; அதன்போது அந்த இளம் திருடன் 20 நிமிடங்களில் தங்க காதணிகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தையும் திருடியதாக கூறப்படுகிறது.

கடந்த எட்டு ஆண்டுகளாக இதே போன்ற குற்றங்களில் ஈடுபட்ட பபாஜான், தனது மகனை திருட்டு செய்வதற்காக ஸ்பெஷல் டிரெனிங் கொடுத்ததை ஒப்புக்கொண்டார். 16 வயது பையன் போலீசில் சிக்கினாலும் மைனர் என்ற முறையில் பெரிய அளவில் தண்டனை கிடைக்காது என்ற எண்ணத்தில் தனது திட்டத்தை நிறைவேற்ற மகனை பயன்படுத்தி கொண்டதாகவும் தெரிகிறது.

போலீசார் கூறியதாவது, பபாஜானின் மனைவிகள் ஸ்ரீரங்கபட்டணம், ஆனேகல் மற்றும் சிக்கபள்ளாபுரா ஆகிய இடங்களில் தனித்து வாழ்கின்றனர். அவ்வப்போது அவன் தனது மூன்று மனைவிகளை சந்தித்து வருவதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் ஜிஎம் மற்றும் அவரது குழு, மே 13 அன்று மைலசந்திராவில் பபாஜானை கைது செய்தனர். போலீசார் பின்பு 188 கிராம் தங்கம், 550 கிராம் வெள்ளி மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை மீட்டுள்ளனர். தற்போது தந்தை, மகன் இருவர் மீதும் தனித்தனியாக 9 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.