பிரதமர் நரேந்திர மோடி இந்தியா, பாகிஸ்தான் நிலை குறித்து கூறியபோது “காஷ்மீர் குறித்த நமது நிலை தெளிவானது. மீதமுள்ள ஒரே விஷயம் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் இந்தியாவுக்கு திருப்பி கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான். வேறு எதையும் பேசும் நோக்கமில்லை. பயங்கரவாதிகளை ஒப்படைக்கும் விவகாரமாய் இருந்தால் பேசலாம். இதற்குள் வேறு எந்த நடவடிக்கைகளையும் நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு நடுவராக யாரும் வேண்டாம்.”
பாகிஸ்தான் ஏதேனும் தவறான நடவடிக்கை எடுத்து இருந்தால், அதற்குத் தகுந்த பதில் அளிக்க வேண்டும் என இந்திய ஆயுதப் படைகளுக்கு திட்டவட்டமான உத்தரவு வழங்கியிருக்கிறேன் என்று கூறினார்.
இந்த நிலையில் சுமார் 40 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இந்தியாவின் வான்கலன் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர் என்று இந்திய ஆயுத படைகள் அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.
இந்திய ராணுவத் தலைமை இயக்குனர் (DGMO) லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் அவர்கள் இதுகுறித்து மேலும்ன் கூறியதாவது:
IC-814 விமானத்தை கடத்தியவர்கள் மற்றும் புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பான பயங்கரவாதிகள், இந்தியாவின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆபரேஷன் சிந்தூரில் பயங்கரவாதி ரவூப் அஜார் இந்தியாவின் தாக்குதல் நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, மேற்குக் எல்லை பகுதிகளில் உள்ள அனைத்து ராணுவ கமாண்டர்களுக்கும் முழு அதிகாரம் வழங்கியுள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தானின் DGMOக்கள் இடையே சனிக்கிழமையன்று உடனடியாக ஏற்பட்ட சமரசம் மீறப்பட்டால், அவர்கள் எதிர்மறை நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.