பாகிஸ்தான் பணிந்தது இந்த 2 காரணங்களுக்காக தான்.. இந்திய ராணுவத்தின் வலிமை..!

  பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் இந்தியா–பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இரு தரப்பிலும் தாக்குதல் தொடங்கப்பட்டாலும், தாக்குதல் ஆரம்பித்த இரண்டே நாட்களில் பாகிஸ்தான் அடிபணிந்து, அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்தது. அமெரிக்கா…

pak surrender

 

பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் இந்தியா–பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இரு தரப்பிலும் தாக்குதல் தொடங்கப்பட்டாலும், தாக்குதல் ஆரம்பித்த இரண்டே நாட்களில் பாகிஸ்தான் அடிபணிந்து, அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்தது.

அமெரிக்கா உள்பட நட்பு நாடுகளிடம் இந்த போரை எப்படியாவது நிறுத்துமாறு கெஞ்சி கேட்டுக் கொண்டது. இதன் விளைவாகவே இந்தியா தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டது.

பாகிஸ்தான் இரண்டே நாட்களில் அடிபணிந்ததற்கான முக்கிய காரணங்கள் இரண்டு என இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. ஒன்று, அரபிக் கடலில் இந்திய கடற்படை முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. மேலும், பாகிஸ்தானின் முக்கிய துறைமுகமான கராச்சி நகரை எந்த நேரத்திலும் தாக்க இந்தியா தயாராக இருந்தது. கராச்சி தாக்கப்பட்டால் பாகிஸ்தானின் பொருளாதாரம் முழுமையாக குலைந்துவிடும் என்பதால் அவர்கள் மிகுந்த பயத்தில் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான், இந்தியாவின் சக்திவாய்ந்த பிரமோஸ் ஏவுகணையை பற்றியும் உணர்ந்தது. பிரமோஸ் தாக்குதலை பாகிஸ்தான் தாங்க முடியாது என்பதையும் புரிந்து கொண்டது. இதன் பிறகு தான் பாகிஸ்தான் அமெரிக்காவிடம் கதறி, இந்தியாவை எப்படியாவது தாக்குதல் நிறுத்த சொல்லுங்கள் என கேட்டு கொண்டது. அதன்பேரில் ட்ரம்ப் தலையிட்டு, இந்த போரை நிறுத்தி வைத்தார். இந்தியா மனிதாபிமானத்தை கருத்தில் கொண்டு தாக்குதலை நிறுத்தினாலும், இனி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் நகரங்களை நேரடியாக தாக்குவோம் என்று இந்தியா எச்சரித்தது.

தற்போது பாகிஸ்தான் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தாங்கள் வெற்றி பெற்றது போன்ற மாயை தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமரும் வாய்சாவடால் பேசுகிறார். “நாங்கள் வென்றோம், எதிரிகள் கோழைகள்” என பேசினாலும், உள்ளுக்குள்ள ஏற்பட்ட பயம் தான் தாக்குதலை நிறுத்த வேண்டிய நிலையை ஏற்படுத்தியது. மொத்தத்தில், இந்தியாவின் வலிமை பாகிஸ்தானுக்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கே புரிந்துவிட்டது. பிரமோஸ் என்னும் ஆயுதத்தின் சக்தி எவ்வளவு என்பது தற்போது உலகறிந்த உண்மை ஆகிவிட்டது.