இந்தியா – பாகிஸ்தான் போர் பதட்ட நேரத்தில் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது எவை எவை?

  இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள போர் பதட்டம் கடந்த சில நாட்களில் நாட்டு மக்கள் மத்தியில் அதிக அழுத்தம் மற்றும் குழப்பத்தை உருவாக்கியுள்ளது. போர் பதட்டம் குறித்து தொடர்ந்து வெளிப்படும் செய்தி, சமூக…

google

 

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள போர் பதட்டம் கடந்த சில நாட்களில் நாட்டு மக்கள் மத்தியில் அதிக அழுத்தம் மற்றும் குழப்பத்தை உருவாக்கியுள்ளது. போர் பதட்டம் குறித்து தொடர்ந்து வெளிப்படும் செய்தி, சமூக ஊடகங்களின் அணுகல், மற்றும் வாட்ஸ் அப் குழுக்களின் செய்திகளால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் போர் பதட்டம் இருந்த நேரத்தில் கூகுளில் இந்தியர்கள் எதை தேடினார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

1. விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளனவா?

2. ஆபரேஷன் சிந்தூர்

3. ஐபிஎல் ரத்து செய்யப்படுமா?

4. ஷெல் தாக்குதல் என்றால் என்ன?

5. இந்தியா-பாகிஸ்தான் போரின் முடிவு எப்போது?

6. IMF பாகிஸ்தானுக்கு கடன் வழங்குமா?

மேற்கண்ட ஆறு கேள்விகள் தான் கடந்த இரண்டு நாட்களாக கூகுளில் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்டது என்று தகவல் வெளியாகி உள்ளன. மேலும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வரும் வதந்திகள் குறித்தும் சில கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் அவை வதந்திகள் என்பதை உறுதி செய்த பின்னர் பல இந்தியர்கள் இது முழுக்க முழுக்க வதந்தி இதை நம்பாதீர்கள் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்தியா பாகிஸ்தான் போர் நடந்து கொண்டிருந்த நிலையில் கூட விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளனவா என்று தான் அதிகமாக தேடப்பட்டதாகவும் அதனை அடுத்து மூன்றாவது இடத்தில் ஐபிஎல் ரத்து செய்யப்படுமா என்ற தேடல், ஐபிஎல் விளையாட்டுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் அதிகமாக உள்ளனர் என்பதை காட்டுவதாகவும் கூறப்படுகிறது.