இந்தியாவின் வான்வழி பாதுகாப்பு அமைப்புகள், AKASH ஏவுகணை அமைப்பும் L-70 ஏர் டிபென்ஸ் கண்களும் பாகிஸ்தான் ஏற்படுத்திய தாக்குதலை எவ்வாறு முறியடித்தன என்பதை இன்று இந்திய இராணுவம் காட்சிப்படுத்தியது.
மேஜர் ஜெனரல் கார்த்திக் சி சேஷாத்ரி கூறுகையில், பாகிஸ்தான் தனது திட்டத்தில், அமிர்தசரஸ் பகுதியில் உள்ள இராணுவ முகாம்கள் மட்டுமல்லாமல், சிவிலியன் பகுதிகளையும், குறிப்பாக பொற்கோவிலை பிரதான இலக்காக வைத்திருந்தது என உளவுத்துறை தகவல்கள் தெரிவித்தது.
“பாகிஸ்தான் இராணுவத்திடம் சட்டபூர்வமான இலக்குகள் இல்லை என்பதால், அவர்கள் இந்திய இராணுவம் மற்றும் மதமடங்கள் உள்ள பகுதிகளைத் தாக்க வாய்ப்பு உள்ளது என்பதை நாங்கள் முன்கூட்டியே கணித்திருந்தோம்,” என அவர் கூறினார்.
“இந்த இலக்குகளில், பொற்கோவில் மிகவும் முக்கியமானதாக தோன்றியது. அதற்காக நாங்கள் சீரமைக்கப்பட்ட, நவீன ஏர் டிபென்ஸ் ஆயுதங்களை இணைத்து, முழுமையான வான்வழி பாதுகாப்பை உருவாக்கினோம்,” என்று மேஜர் ஜெனரல் சேஷாத்ரி தெரிவித்தார்.
மே 8-ஆம் தேதி அதிகாலை இருள் சூழ்ந்த நேரத்தில், பாகிஸ்தான் சார்பாக ட்ரோன்கள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் பெரும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் இந்திய இராணுவம் முன்னேற்பாடாக இருந்ததால், அந்த முயற்சி முற்றிலும் தோல்வியடைந்தது.
“எங்கள் வீரமான பாதுகாப்பு படையினர் எல்லா ட்ரோன்களையும், ஏவுகணையும் அழித்துவிட்டனர். பொற்கோவிலுக்கு எந்த ஒரு சிறு சேதமும் ஏற்படவில்லை!”
பொற்கோவிலை தாக்கினால் இந்தியாவில் இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் பிரச்சனையை உருவாக்கலாம் என்று பாகிஸ்தான் திட்டமிட்டது. ஆனால் இந்திய ராணுவத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அந்த திட்டம் தூள் தூளாக நொறுங்கியது.