பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் பிரதமர் மோடி எடுத்த இரண்டு முக்கிய முடிவுகளில் முதல் விஷயம் மே 7 அன்று எல்லையை கடந்த பயங்கரவாத தலைமையகங்களை நேரடியாக தாக்கியது. பாகிஸ்தானின் பயங்கரவாத தளங்களான பஹவல்பூர் மற்றும் முரீத்கே ஆகியவற்றை “மண்ணில் கலந்துவிடச் செய்” என்று படைகளுக்கு உத்தரவிட்டார்.
இரண்டாவது, மே 10 அன்று பாகிஸ்தானின் பல விமான தளங்களை குறிப்பாக இஸ்லாமாபாத், ராவல்பிண்டி போன்ற இடங்களில் தாக்கியது. இதற்கு முன்னதாக பாகிஸ்தான், இந்தியாவின் முக்கிய ராணுவ தளங்கள் மீது ஏவுகணைகளை செலுத்த முயன்றது.
அமெரிக்கா துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், மோடியை அழைத்து தாக்குதல்களை நிறுத்த முடியுமா என்று கேட்ட போதும், மோடி தனது நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்தார். “பாகிஸ்தானுக்கு எந்த ஓர் வாய்ப்பும் தரமாட்டேன்; அவர்கள் தொடர்ந்தால் தாக்குதல் மூலம் பதில் கிடைக்கும்” என்று வான்ஸிடம் மோடி கூறினார்.
அதேபோல, அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோவுடன் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், “இந்தியாவிடம் நேரடியாக பாகிஸ்தான் DGMO பேசியால் மட்டுமே தாக்குதல் நிறுத்தப்படும் என்று பதில் அளித்தார். இதனால், திடீரென மே 10 அன்று பாகிஸ்தான் DGMO, இந்தியாவிடம் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக அறிவித்தார். அன்று மாலை 3.35 மணிக்கு இரு நாடுகளின் DGMO-களும் பேசிக் கொண்டு தாக்குதலை நிறுத்த முடிவை எடுத்தனர். இருந்தாலும் பாகிஸ்தான் தொடர்ந்து ட்ரோன்களை அனுப்பிக்கொண்டிருப்பதால், இந்தியா கண்காணிப்பு மற்றும் சமமான பதிலடி கொடுக்கும் நிலையில் உள்ளது.
இந்த சம்பவங்கள் அனைத்தும் மோடியின் புதிய கொள்கையை வெளிப்படுத்துகின்றன. “எல்லை பாதுகாப்போ, அணு ஆயுத மிரட்டலோ பயங்கரவாதிகளை காப்பாற்ற முடியாது. மே 7 தாக்குதலுக்கு முன், மோடி படைகளுக்கு, பயங்கரவாதிகளின் சிறிய முகாம்களை விட்டு வையுங்கள், நேரடியாக தலைமை தளங்களான முரீத்கே, பஹாவல்பூர் மீது தாக்குங்கள் என உத்தரவிட்டார்.
இந்த தாக்குதலில், பாகிஸ்தானின் பயங்கரவாதத் தலைவர் மௌலானா மசூத் அசாரின் குடும்பத்தினர் முழுவதும் அழிக்கப்பட்டனர். ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு ISI-யால் உருவாக்கப்பட்டது என்பதும், இந்த தாக்குதல் பாகிஸ்தான் படைக்கு நேரடியான சமாதானக் கூற்று அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மே 7 “ஆபரேஷன் சிந்தூர்” தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டபோது, இந்தியாவுக்கு பஹல்காம் தாக்குதலுக்கான பழிவாங்கல் நிறைவு பெற்றது. ஆனால் பாகிஸ்தான் அமைதியாக இருக்காது என்பதும் இந்தியாவுக்கு தெரிந்திருந்தது.
மே 8 இரவில் பாகிஸ்தான், லே முதல் சிர் க்ரீக் வரை 36 இடங்களில் பொதுமக்கள் மற்றும் ராணுவ தளங்களை ட்ரோன்கள் மூலம் தாக்க முயன்றது. இந்தியா எல்லா ட்ரோன்களையும் வீழ்த்தியதோடு, பதிலடியாக லாகூர் விமான பாதுகாப்பு அமைப்பையும் ராணுவ தளங்களையும் அழித்தது.
ஆனால் மே 9 IMF நிதி உதவிக்கு பின், பாகிஸ்தான் மோசமான முடிவெடுத்தது. இந்திய ராணுவ தளங்கள் மீது ஏவுகணைகளை செலுத்தியது. பஞ்சாப், ஹரியானா, அடம்பூர், உதம்பூர், ஜம்மு, ஸ்ரீநகர் ஆகிய இடங்களை அவர்கள் குறிவைத்தனர். ஒரு தகவலின் படி, டெல்லியை நோக்கி வந்த ஒரு லாங்-ரேஞ்ச் ஏவுகணை சிர்ஸாவில் வீழ்த்தப்பட்டது.
அந்த தருணத்தில் மோடி மிகப்பெரிய முடிவெடுத்தார். பாகிஸ்தானுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியா இதுவரை யுத்தத்தில் பயன்படுத்தாத பிரமோஸ் ஏவுகணையை பயன்படுத்தியது. ரஃபேல் விமானங்களில் இருந்து SCALP மற்றும் HAMMER ஏவுகணைகளும் பாகிஸ்தானின் 10 விமான தளங்களில் தாக்கப்பட்டன. குறிப்பாக ராவல்பிண்டியின் நூர் கான் விமான தளம் மற்றும் இஸ்லாமாபாத் விமான தளம் மிக மோசமாக பாதிக்கப்பட்டன.
மோடி கொடுத்த செய்தி தெளிவானது, பாகிஸ்தான் உள்ளேயும் தாக்குவோம் என்பதுதான். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியது போல, “இந்திய தாக்குதல் ராவல்பிண்டி வரை சென்ற்து, இதுதான் பாகிஸ்தானை இடிந்து விழச் செய்தது. இந்தியா வெளியிட்ட புகைப்படங்களும் இதனை உறுதி செய்கின்றன.
இந்தியாவின் போக்கு முற்றிலும் மாறிவிட்டது. இந்த நாட்களில், மோடி மட்டுமன்றி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் பாகிஸ்தானுடன் எந்தவொரு தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை.
சிந்து நதிநீர் ஒப்பந்தமும் இடை நிறுத்தப்பட்ட நிலையில் உள்ளது. மோடி, ஜம்மு & காஷ்மீரில் பிரம்மாண்டமான முடிவாக 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்தவர். அவர் கண்டிப்பாக நம்புவது, பாகிஸ்தானுடன் தீர்க்க வேண்டிய ஒரே விஷயம், அது பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் திரும்ப பெறுவதுதான். வேறு எதுவும் பேச வேண்டியதில்லை. நிச்சயம் அவர் தனது ஆட்சி முடிவதற்குள் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பார் என நம்பலாம்..