மோடியை பாராட்ட மனமில்லாத எதிர்க்கட்சிகள்.. ஆனால் அதிலும் சில நல்லவர்கள்..!

  போர் என்பது உங்கள் நம்பகமான நண்பர்கள் யார்? எதிரி யார்? என்பதைக் காட்டும் தருணமாகும். பாகிஸ்தானுக்கு எதிராக மோடி அரசு எடுத்த நடவடிக்கையை வெளிப்படையாக எதிர்க்கட்சிகள் பாராட்டவில்லை என்றாலும் எதிர்பாராத விதமாக, சில…

owaisi shashi tharoor

 

போர் என்பது உங்கள் நம்பகமான நண்பர்கள் யார்? எதிரி யார்? என்பதைக் காட்டும் தருணமாகும். பாகிஸ்தானுக்கு எதிராக மோடி அரசு எடுத்த நடவடிக்கையை வெளிப்படையாக எதிர்க்கட்சிகள் பாராட்டவில்லை என்றாலும் எதிர்பாராத விதமாக, சில எதிர்க்கட்சித் தலைவர்களிடமிருந்து ஆதரவை பெற்றுள்ளது.

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்து தேசத்துக்கு தகவல் வழங்கிய DGMO மற்றும் அவரது குழு, சோஃபியா குரேஷி, வியோமிகா சிங் போன்றவர்கள் கட்சி அரசியலை தாண்டி நாட்டின் முயற்சிகளை சில எதிர்க்கட்சி தலைவர்கள் வெளிப்படையாக ஆதரித்தனர்.

தொடர்ச்சியான அரசை விமர்சனம் செய்து வருபவர், பாஜகவை முஸ்லிம்களுக்கு எதிரான கட்சியாக குற்றம் சாட்டும் அசதுதீன் ஓவைசி, ஒருசிலரால் பாஜகவின் “B டீம் எனவும் அழைக்கப்படுகிறார். இருப்பினும், ஆபரேஷன் சிந்தூரின் போது, ஓவைசி, பாகிஸ்தானை கண்டிக்கும் உறுதியான முஸ்லிம் குரலாக தோன்றினார். இஸ்லாத்தின் போதனைகளுக்கு எதிராக பாகிஸ்தானின் நடவடிக்கைகள் உள்ளன என அவர் வெளிப்படையாக தெரிவித்தார்.

ஆபரேஷன் சிந்தூருக்கு வலுவாக ஆதரவு தெரிவித்த ஓவைசி, “பாகிஸ்தானில் உள்ள அனைத்து தீவிரவாத மையங்களும் அழிக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தினார். அவரது நிலைப்பாடு முக்கியமானது, ஏனெனில் அவர் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை உறுதியாகக் காக்கும் ஒருவராகக் கருதப்படுகிறார். இந்திய முஸ்லிம்களின் நிலையை சுட்டிக்காட்டி, காஷ்மீரில் தனது நடவடிக்கைகளை பாகிஸ்தான் நியாயப்படுத்த முயலுகிறது என குற்றம் சாட்டினார் . ஓவைசியின் இந்த பதில், சர்வதேச அளவில் இந்தியா ஒருமித்த நாடு என்பதை வலியுறுத்தியது, இதில் இந்துக்களும் சிறுபான்மையினரும் சமாதானமாக வாழ்கின்றனர் என்பதையும் நிரூபித்தது. இது பாகிஸ்தானும் அதன் ஆதரவாளர்களும் பரப்பும் தவறான தகவலுக்கு எதிரான ஒரு சக்தியான பதிலாக செயல்படுகிறது.

அதேபோல் ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, அரசுக்கு சாஸீதரூர் அளித்த உறுதியான ஆதரவு குறிப்பிடத்தக்கது. அவரது சொந்த கட்சியினர் ஜெயராம் ரமேஷ் கூட, “ஸாஸீதரூரின் கருத்துகள் காங்கிரசின் நிலைப்பாடல்ல” என்று தெரிவித்திருந்தாலும், அரசுக்கு அவர் வழங்கிய உறுதியான ஆதரவு பாராட்டை பெற்றது.

டொனால்ட் ட்ரம்ப், இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடுவர் நிலை வகிக்க தயாராக உள்ளதாக கூறியபோது, காங்கிரஸ், இது ஷிம்லா ஒப்பந்தத்துக்கு மாறாகவும், இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு எதிராகவும் இருப்பதாக அரசை கடுமையாக விமர்சித்தது. ஆனால், சசிதரூர், “இந்தியா ஒருபோது மூன்றாவது நாட்டின் தலையீட்டையும் ஏற்காது” என்று தெளிவாகக் கூறினார். இதனால் காங்கிரஸின் விமர்சனத்தை கேள்விக்குள்ளாக்கியதோடு, அரசின் நம்பிக்கையையும் சர்வதேச அளவில் அதன் நிலைப்பாட்டையும் வலுப்படுத்தினார்.

ஓவைசி, தரூர் மற்றும் மனீஷ் திவாரி போன்றவர்கள், பாஜகவுக்கு எதிரான அரசியல்ரீதியாக இருந்தாலும், மோடி அரசின் முயற்சிகளை உறுதி செய்வதற்கும், அதன் பார்வையை வெளிக்கொணர்வதற்கும் துணை புரிந்துள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.