இந்தியாவில் டிரம்பின் ரியல் எஸ்டேட் பிசினஸ்.. ஒரே நாளில் ரூ.3250 கோடிக்கு வியாபாரம்..!

  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா–பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை தாம் நடத்தியதாக கூறிய பின்னணியில் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், குருக்ராமில் உள்ள Trump Residences முழுமையாக விற்பனையாகியுள்ளது. இது இந்தியாவின்…

trump

 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா–பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை தாம் நடத்தியதாக கூறிய பின்னணியில் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், குருக்ராமில் உள்ள Trump Residences முழுமையாக விற்பனையாகியுள்ளது. இது இந்தியாவின் ரியல் எஸ்டேட் சந்தைக்கு ஒரு முக்கியமான தருணம் என கூறப்படுகிறது.

டிரம்ப் அமெரிக்க அதிபர் ஆவதற்கு முன்னரே மிகப்பெரிய தொழிலதிபர் என்பதும், இந்தியாவிலும் அவருக்கு பல பிசினஸ் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் Smartworld Developers மற்றும் Tribeca Developers இணைந்து Trump என்ற கட்டிட திட்டத்தில் Trump Organisation-ன் இந்திய கூட்டாளிகளாக செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, முதல் நாளிலேயே ₹3,250 கோடி மதிப்புள்ள வீடுகள் முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த கட்டிடத்தின் முக்கிய அம்சங்கள்:

ஒவ்வொறு வீடும் ரூ.125 கோடி மதிப்பில் விற்பனை ஆகியது.

Trump Residences, செக்டர் 69, Southern Peripheral Road மற்றும் Golf Course Road Extension பகுதியில் அமைந்துள்ளது.

இந்தியாவில் டிரம்ப் பிராண்டு கொண்ட ஆறாவது குடியிருப்பு திட்டம் இது என்பதும், குருக்ராமில் மட்டும் இது இரண்டாவது திட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கட்டுமானம் முடிவடையவில்லை என்றாலும், ₹8 கோடி முதல் ₹15 கோடி வரையிலான 129 சொகுசு அபார்ட்மெண்ட்கள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன.

கட்டுமான விவரங்கள்:

51 மாடி இரட்டை கோபுரங்கள், மொத்தமாக 12 லட்சம் சதுர அடி விற்பனைக்கு உகந்த பகுதி.

அடிப்படை விலை: ₹27,000 ஒரு சதுர அடிக்கு.

சிறப்பம்சங்கள்:

தரையில் இருந்து மேல்மாடி வரை கண்ணாடி சுவர்கள், இரட்டைப்பட உயரம் கொண்ட வீடுகள், தனிப்பட்ட எலிவேட்டர்கள், பின்னணியில் அரவள்ளி மலைக்காட்சிகள்.

இந்தியாவில் முதன்முறையாக, மீன்கள் நிறைந்த Aquarium Bar மற்றும் உணவக வசதி இங்கு அமையவுள்ளது.

இந்த திட்டம் குறித்து Smartworld Developers நிறுவனர் பங்கஜ் பன்சால் கூறியபோது, ‘”Trump Residences-க்கு கிடைத்த அபாரமான வரவேற்பு, இந்தியாவில் உலக தரமான வாழ்வு குறித்த நாட்களின் விருப்பத்தை பிரதிபலிக்கிறது.” என்றார்.

Tribeca Developers நிறுவனர் கல்பேஷ் மேத்தா கூறியபோது, ‘இது வெறும் ரியல் எஸ்டேட் திட்டம் அல்ல; இந்தியாவின் சொகுசு சந்தைக்கான வரலாற்றுச் சின்னம். Trump பிராண்டின் காந்த ஈர்ப்பு மற்றும் இந்திய உயர் வருமான குழுக்களில் அதன் பெயர்ச்சிறப்பே இந்த வெற்றிக்கு காரணமாகவும் அவர் கூறினார்.

வட இந்தியாவில் Trump பிராண்ட் கொண்ட இரண்டாவது திட்டம். முதல் Trump Towers Gurugram 2018-ல் தொடங்கப்பட்டு, இம்மாத இறுதியில் டெலிவரி செய்யப்படவுள்ளது.

2024 ஏப்ரலில், Tribeca நிறுவனர் கல்பேஷ் மேத்தா, “Donald Trump Jr. அல்லது Eric Trump இந்தியா வருவார்கள்” என கூறியிருந்தார். அவர்கள் திட்ட முன்னேற்றத்தைக் கண்காணிக்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Donald Trump Jr., இந்தியாவுக்கு ஏற்கனவே 2018 மற்றும் 2022-இல் வந்துள்ளார். Trump குடும்பம் இந்திய ரியல் எஸ்டேட் திட்டங்களில் தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.