இன்னும் எத்தனை தேச துரோகிகள்? 40 ஆயிரம் ரூபாய்க்காக பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன நபர் கைது..!

  ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு தான் நாடு முழுவதும் சந்தேகத்துக்கிடமான நபர்கள் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் காசுக்காக பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன பல உளவாளிகள் கண்டுபிடிக்கப்பட்ட கைது செய்யப்பட்டு வருகிறார்கள். சின்ன…

spy 1

 

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு தான் நாடு முழுவதும் சந்தேகத்துக்கிடமான நபர்கள் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் காசுக்காக பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன பல உளவாளிகள் கண்டுபிடிக்கப்பட்ட கைது செய்யப்பட்டு வருகிறார்கள். சின்ன தொகை முதல் பெரிய தொகை வரை வாங்கிக் கொண்டு பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் தற்போது இன்னும் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத்தின் டேரர் தடுக்குப் பிரிவு (ATS) கட்ச் எல்லை பகுதியில் ஒரு சந்தேகத்திற்கிடமான பாகிஸ்தான் உளவாளியை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர் சஹதேவ் சிங் கோஹில் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ATS அதிகாரிகள் மேலும் தெரிவித்ததாவது, கோஹில் கட்ச் மாவட்டத்தின் தயாபார் பகுதியில் ஒரு சுகாதார பணியாளராக வேலை செய்து வந்தார். ஆனால் அவர், பாகிஸ்தானுக்காக உளவு தகவல்களை சேகரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

அறிக்கைகளின்படி, கோஹில் “அதிதி பாரத்வாஜ்” என அறியப்படும் ஒருவருடன் தொடர்பு கொண்டுள்ளார். இதேபெயரில் உள்ள பெண் உண்மையில் பாகிஸ்தான் உளவாளி என தகவல்கள் கூறுகின்றன. அந்தப் பெண்ணின் கட்டளைகளை பின்பற்றி, கோஹில் இந்திய கடற்படை மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை (BSF) குறித்து முக்கிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதற்குப் பதிலாக அவருக்கு ₹40,000 பணம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அதிதி எனும் நபர் உண்மையில் யாரும் இல்லை என்றும், வேறு பெயரில் உள்ள பாகிஸ்தான் உயர் அதிகாரி ஒருவர் தன்னுடைய உண்மையான பெயரை மறைத்து இந்த பெயரை பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகம் எழுகிறது. கோஹில் கடந்த ஒரு வருடமாக அந்த நபருடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்துள்ளார்.

கோஹிலின் மொபைல் போன் தற்போது ஃபாரன்சிக் ரிப்போர்ட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஒரு சாதாரண சுகாதார பணியாளரின் தொடர்பு விவரங்களையும் பாகிஸ்தானின் உளவு அமைப்பு அணுகியிருக்கிறது என்பது ஆச்சரியத்துடன் அதிர்ச்சியளிக்கும் விவரமாகும். குஜராத் ATS இப்போதும் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு, இந்த பாகிஸ்தானிய உளவு வலையமைப்பின் முழுமையான பின்னணியை ஆய்வு செய்து வருகின்றது.