ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்கம் பகுதியில் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் உறவுகள் மோசமான நிலைக்கு சென்றுள்ளன.
இந்த தாக்குதலுக்கு பிறகு, இந்தியா பல கடுமையான நடவடிக்கைகள் எடுத்துள்ளது. அதில் முக்கியமான ஒன்று, 1960-ல் கையெழுத்தான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியா அறிவித்தது.
இந்த நிலையில் தான் இன்று டெல்லியில் நடந்த ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்ட பிரதமர் பேசியபோது, ‘இப்போது இந்தியாவின் நீர்கள் இந்தியாவுக்காகவே ஓடப்போகின்றன, இந்தியாவுக்காக சேமிக்கப்பட போகின்றன, இந்திய மக்களின் நலனுக்காகவே பயன்படுத்தப்படப்போகின்றன,” என்று கூறினார்.
ஏப்ரல் 24-ம் தேதி, பஹல்கம் தாக்குதலுக்குப் பிறகு, அந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கும் அவர்களை ஆதரித்தவர்களுக்கும் தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் கூறியிருந்தார்.
ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற்ற உயர்மட்ட பாதுகாப்பு கூட்டத்தில், இந்தியப் படைகள் முழுமையான நடவடிக்கையின் சுதந்திரத்துடன் செயல்படலாம் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகள் இந்தியா–பாகிஸ்தான் இடையே நீர்நிலைகளை பகிரும் முக்கிய பங்காற்றுகின்றன. பாகிஸ்தானின் விவசாய நிலங்களில் 80% இந்த நீரில்தான் சார்ந்திருக்கிறது. இந்நிலையில், இந்த நடவடிக்கையை எதிர்த்து பாகிஸ்தான் யுத்தம் என மிரட்டியுள்ளது. அதே நேரத்தில், தங்களின் ஆதரவுடன் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை பாகிஸ்தான் இன்னும் கண்டிக்காமல் இருக்கிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
