பாகிஸ்தானுக்கு 3 எச்சரிக்கைகள் விடுத்த பிரதமர் மோடி.. உரையின் முழு விவரங்கள்..!

  1. பயங்கரவாதம் அல்லது பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பற்றி மட்டுமே பேச்சுவார்த்தை நடக்கும் 2. பயங்கரவாதம் உயிருடன் இருக்கும் வரை எந்த வர்த்தகமும் இல்லை 3. எல்லைக்கடந்த தாக்குதல்களின் அச்சுறுத்தல் நிலவுகிறது என்றால்…

pradhan mantri jeevan jyoti bima yojana in tamil and how to join this insurance

 

1. பயங்கரவாதம் அல்லது பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பற்றி மட்டுமே பேச்சுவார்த்தை நடக்கும்

2. பயங்கரவாதம் உயிருடன் இருக்கும் வரை எந்த வர்த்தகமும் இல்லை

3. எல்லைக்கடந்த தாக்குதல்களின் அச்சுறுத்தல் நிலவுகிறது என்றால் அமைதியை பற்றிய மாயை வேண்டாம்

மேற்கண்ட மூன்று எச்சரிக்கைகளை பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு விடுத்த நிலையில் அவரது உரையின் முழு வடிவம் இதோ:

ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலாக, மே 7 அன்று இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலின் விளைவாக, பாகிஸ்தான் பதறிய நிலையில், இந்திய ராணுவ தலைமையிடம் தொடர்பு கொண்டு, போருக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரிக்கை வைத்தது. இனிமேல் பயங்கரவாத நடவடிக்கைகள் நடக்காது என்று தெரிவித்தது.

பாகிஸ்தான், கோயில்கள், குருத்வாராக்கள், வீடுகள் போன்ற குடியிருப்பு பகுதிகளை மையமாக வைத்து தாக்கியது.”நாட்டை பாதுகாக்க எந்த அளவிற்கும் தயாராக இருக்கிறோம். அணு மிரட்டல்களால் பயப்படப்போவதில்லை.

பாகிஸ்தானின் டிரோன்கள், ஏவுகணைகள் அனைத்தையும் இந்தியா முற்றாக அழித்தது. உலகமே அதனை பார்த்தது. ஒற்றை தாக்குதலில், பாகிஸ்தானில் பல ஆண்டுகளாக சுதந்திரமாக இயங்கிய பயங்கரவாத தலைவர்கள் அழிக்கப்பட்டனர்.

“ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் ராணுவ நடவடிக்கை அல்ல, அது, நியாயம் வழங்கும் ஒரு உறுதியான முடிவாகும். இதே நேரத்தில், அவர் இந்திய ராணுவம், உளவுத்துறை, விஞ்ஞானிகள் அனைவருக்கும் நன்றியும், பாராட்டும் தெரிவித்து கொள்கிறேன்.

நாட்டின் ஒவ்வொரு மகளுக்கும், தாய்க்கும், சகோதரிக்கும் இந்த வீரத்தை அர்ப்பணிக்கிறேன். பாகிஸ்தானில் பயங்கரவாத தளங்கள் மட்டுமல்ல, அவர்களின் தைரியமும் நொறுங்கியது”. இவ்வாறு பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்தார்.

இந்த உரை, இனி பயங்கரவாதத்திற்கு ஒரு வாய்ப்பு கூட தரமாட்டோம் என்ற இந்தியாவின் உறுதியான சைகையாக அமைகிறது.