லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். 2016 ஆம் ஆண்டு வெளியான அவியல் குறும்பட தொகுப்பின் மூலம் தனது கேரியரை தொடங்கினார் லோகேஷ் கனகராஜ். 2017 ஆம் ஆண்டு மாநகரம் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் லோகேஷ் கனகராஜ்.
பின்னர் 2019 ஆம் ஆண்டு கைதி திரைப்படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ். இந்த திரைப்படம் வெற்றி பெற்று அவருக்கு அந்தஸ்தை பெற்று தந்தது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கினார். அடுத்ததாக மாஸ்டர், விக்ரம் போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக ஆனார் லோகேஷ் கனகராஜ். இது மட்டுமில்லாமல் தயாரிப்பாளராக ஒரு சில படங்களையும் தயாரித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக ரஜினிகாந்த்தை வைத்து இவர் இயக்கும் கூலி திரைப்படம் வெளிவர இருக்கிறது.
இந்நிலையில் முன்னமே ஒரு நேர்காணலில் லோகேஷ் கனகராஜ் சினிமாவில் ஒரு 10 படத்தை இயக்குவேன் அவ்வளவுதான் அதற்கு பிறகு நான் சென்று விடுவேன் என்று கூறியிருப்பார். அதைப் பற்றி தற்போது ஒரு நேர்காணலில் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அவர் கூறியது என்னவென்றால், நான் முன்னதாக பத்து படங்கள் இயக்கி விட்டு சினிமாவை விட்டு சென்று விடுவேன் என்று சொன்னேன். அதற்கு பிறகு இரண்டு முக்கியமான பெரிய இயக்குனர்கள் என்னிடம் சினிமாவிற்குள் எப்படி யார் வரவேண்டும் எப்போது வெளியே செல்ல வேண்டும் என்பதை நாம் முடிவு செய்ய முடியாது அது சினிமாவே தான் முடிவு செய்யும் அதனால் இத்தனை படங்கள் பண்ணிவிட்டு நான் சென்று விடுவேன் என்று சொல்லாதீர்கள் என்று எனக்கு அறிவுரை கூறினார்கள். அதன்படி எத்தனை படங்கள் வருகிறதோ என்னால் எத்தனை படங்கள் நன்றாக கொடுக்க முடிகிறதோ அத்தனை படம் பண்ணலாம் என்று இருக்கிறேன் என்று பகிர்ந்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.