சொந்த ஊரில் வீடு கட்ட ஆசைப்பட்ட 25 வயது BSF வீரர்.. பாகிஸ்தான் துப்பாக்கி சூட்டில் பரிதாப பலி..!

  மணிப்பூரில் பிறந்து வளர்ந்த 25 வயது BSF வீரர் தனது தாயையும் தந்தையும் சொந்த வீட்டில் வாழ வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நிலையில் நாட்டிற்காக உயிர்நீத்த துயர சம்பவம் பெரும் சோகத்தை…

bsf 1

 

மணிப்பூரில் பிறந்து வளர்ந்த 25 வயது BSF வீரர் தனது தாயையும் தந்தையும் சொந்த வீட்டில் வாழ வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நிலையில் நாட்டிற்காக உயிர்நீத்த துயர சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரை சேர்ந்த தீபக் சிங்ககாம், பாரத எல்லைப் பாதுகாப்புப் படையின் (BSF) 7வது படை பிரிவில் ஜம்மு காஷ்மீரில் பணியில் இருந்தார். மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் இனக்கலவரத்திலிருந்து விலகி பாதுகாப்பாக ராணுவத்தில் தனது மகன் இருப்பது அவரது பெற்றோருக்கு நிம்மதியாக இருந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக அவர் மே 10 அன்று காலை பாகிஸ்தானின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து அதன் பின் உயிரிழந்தார்.

25 வயதான தீபக், இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள யைரிப்போக் யம்பேம் மாதக் லேக்காய் கிராமத்தை சேர்ந்த மேதை சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவரது உடல் மே 14 அன்று முழுமையான அரச மரியாதையுடன் கிராமத்தில் தகனம் செய்யப்பட்டார்.

மே 9 நள்ளிரவில் அவர் தனது தந்தை சிங்ககாம் பொன்பிஹாரி சிங்கிடம் கடைசி முறையாக தொலைபேசியில் பேசியுள்ளார். “11:55க்கு என் மகன் அழைத்தார். ‘ஏன் இன்னும் தூங்கல?’ என்று கேட்டேன். ‘டூட்டியில் இருக்கேன்’ என்று பதில் கூறினார்,” எனத் தந்தை கூறினார்.

இரண்டு நாட்கள் கழித்து, தீபக் உயிரிழந்த செய்தி வந்தது. “என் மகனை இழந்தது எனக்கு வாழ்க்கை முழுவதும் ஒரு பிணையாக இருக்கும். ஆனாலும், தேசிய சேவையில் வீரராக உயிர்தியாகம் செய்ததை நான் பெருமையாக நினைக்கிறேன்,” என்றார் தந்தை.

2021ல் BSF-வில் சேர்ந்து, 2022 முதல் ஜம்முவில் பணியில் இருந்த தீபக், விளையாட்டில் குறிப்பாக கால்பந்தாட்டத்தை மிகவும் விரும்பியவர். அவரது குடும்பம் மிகவும் எளிய பின்னணியிலிருந்து வந்தது. மண் பானையில் தான் பாத்திரங்கள்,கூரை வீடு. விவசாயியான தந்தை தினசரி வேலைகளில் ஈடுபட்டு ரூ.500-700 வரையில் சம்பாதிப்பவர். குடும்பத்தின் முதன்மை ஆதாரமாக இருந்தவர் தீபக்.

கடந்த விடுமுறையின் போது, ஒரு சொந்த வீடு கட்ட ஆசை தெரிவித்திருந்தார். ஆனால் தந்தை, “இப்போதைக்கு முடியாது, முதலில் பணத்தை சேமிப்போம், அதன்பின் வீடு கட்டலாம் என்று சொன்னேன்,” எனக் கூறினார்.

மணிப்பூரில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வரும் இனக்கலவரம் தீபக் குடும்பத்தையும் பாதித்துள்ளது. “அவர் அனுப்பும் பணமே நம்முடைய வாழ்வாதாரமாக இருந்தது. இப்போது நாங்கள் நம்பிக்கையற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்,” எனத் தந்தை வலியுடன் கூறினார்.

தாயார் சிங்ககாம் இபெம்ஹால் தேவி, “இளம் வயதிலேயே குடும்ப பொறுப்புகளை எனது மகன் சுமந்து வந்தார். தம்பியின் படிப்பையும் பார்த்தார். ஒரு வீடு கட்ட ஆசைப்பட்டார். அதை நிறைவேற்ற முடியாமல் போனது எனக்கு மனக்கஷ்டமாக உள்ளது. ஆனாலும் தேசத்திற்கு உயிர் தியாகம் செய்த அந்த பெருமையை என் மனம் நிறைய உணர்கிறது,” என கூறினார்.