பாகிஸ்தான் பிரதமருக்கு PR ஆக மாறிவிட்டாரா ஜெய்ராம் ரமேஷ்? பாஜக கிண்டல்..!

  பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர், அமெரிக்க ஆயுதப் படைகளின் 250வது ஆண்டு விழாவிற்கு அமெரிக்கா பாகிஸ்தானை மட்டும் அழைத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தார். ஆனால், இந்த தகவலை அமெரிக்கா…

jairam ramesh

 

பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர், அமெரிக்க ஆயுதப் படைகளின் 250வது ஆண்டு விழாவிற்கு அமெரிக்கா பாகிஸ்தானை மட்டும் அழைத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தார். ஆனால், இந்த தகவலை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதையடுத்து, ஜெய்ராம் ரமேஷின் கூற்று பொய் என நிரூபனம் ஆனதாக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் ஜெய்ராம் ரமேஷ், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீஃபுக்கு PR ஆக மாறிவிட்டதாகவும் அவர் கிண்டலாக பதிவிட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

“அமெரிக்க ஆயுதப் படைகளின் ஆண்டு விழாவிற்கு ஆசிம் முனீரை அழைத்ததாக ஜெய்ராம் ரமேஷ் சொன்னார். இதை இந்திய வெளியுறவு கொள்கையின் தோல்வி என்றும் விமர்சித்தார். ஆனால், வெள்ளை மாளிகை இதை திட்டவட்டமாக மறுத்திருக்கிறது. ஒருவேளை, ஜெய்ராம், ஷெஹ்பாஸ் ஷெரீஃப் மற்றும் பாகிஸ்தானுக்கு மக்கள் தொடர்புத் தலைவராக மாற வேண்டும் போல. பாகிஸ்தானுக்கு ஆதரவாக போலியான தகவல்களை பரப்பும் காங்கிரஸ் இப்படி செய்வது இது முதல் முறையல்ல,” என பூனாவாலா எக்ஸ் தளத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் மீது மேலும் பல தவறான தகவல்களை பரப்பியதாக பூனாவாலா குற்றம் சாட்டினார். ஆபரேஷன் சிந்தூரை தோல்வி என்றும், வெறும் ‘சின்ன விஷயம்’ என்றும் காங்கிரஸார் விமர்சனம் செய்தார்கள். 26/11 மும்பை தாக்குதலின்போதும் பாகிஸ்தானுக்கு ‘சாதகமாகச்’ செயல்பட்டார்கள்,” என்றும் அவர் சாடியுள்ளார்.

இப்போதும் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு மட்டும் அழைப்பு விடுத்துள்ளதாகவும், அமெரிக்கா உண்மையில் என்னதான் செய்கிறது? இது இந்தியாவுக்கு மற்றொரு பெரிய ராஜதந்திர பின்னடைவு,” என்று ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், எந்த வெளிநாட்டு ராணுவத் தலைவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என வெள்ளை மாளிகை திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால் ஜெய்ராம் ரமேஷ் கூற்று பொய் என்பது உறுதியாகியுள்ளது.

பாகிஸ்தான் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடும் போதெல்லாம் அதை உண்மை என நம்பி காங்கிரஸ் விமர்சனம் செய்து பின்னர் மூக்குடைபட்டு நிற்கிறது என காங்கிரஸ் மீது நெட்டிசன்கள் விமர்சனம் செய்கின்றனர்,