NIA விசாரணையில் 2023ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானிய அதிகாரிகளிடம் பணம் வாங்கி, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை CRPF ஜவான் மோதி ராம் ஜாட் வழங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் சமூக ஊடகங்கள் வழியாக பாகிஸ்தானுடன் தொடர்புகளை ஏற்படுத்தியதாகவும், பல வழிகளில் பணம் பெற்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவருடைய மனைவியின் வங்கிக் கணக்கில் பாகிஸ்தான் தொடர்புடைய நபர்கள் பல லட்சம் ரூபாய்களை அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
‘ஆபரேஷன் சிந்தூர்’ முடிந்த பின்னர் அவரது இணையச் செயல்பாடுகள் சந்தேகத்துக்கிடமாக இருந்ததை தொடர்ந்து, CRPF அமைப்பு விசாரணையை தொடங்கியது. 4 நாட்கள் தீவிர விசாரணைக்கு பிறகு, ஜாட் பணிநீக்கம் செய்யப்பட்டு மே 21 அன்று NIAவிடம் ஒப்படைக்கப்பட்டார். பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட ஆபரேஷன்கள் மற்றும் பாதுகாப்பு மையங்களின் இருப்பிடம் குறித்து பாகிஸ்தானியர்களுக்கு அவர் தகவல் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த கைது, பாகிஸ்தான் ஆதரவு கொண்ட அமைப்புகள் வடஇந்தியாவில் செயலில் இருப்பது உறுதியாக்கியதோடு, இந்திய உளவுத்துறைகளும் இதற்கெதிராக தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
கடந்த இரண்டு வாரங்களில், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் 15க்கும் மேற்பட்டோர் உளவு சொன்னதாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஜோதி மல்ஹோத்ரா மற்றும் குஸாலா என்ற இரு பெண்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.