வீடு, மனைவி, மக்களை சதா குறை சொல்பவரா நீங்கள்? அப்படின்னா இது உங்களுக்குத்தான்..!

எப்பவுமே நமக்கு அடுத்தவர் குறைகள்தான் கண்ணுக்குத் தெரியும். நம்ம குறைகள் வெளியே தெரியாது. இதைத்தான் பைபிளில் பிறர் கண்ணில் உள்ள தூசியைப் பார்க்காதே. உன் கண்ணில் உள்ள உத்தரத்தைப் பார்னு சொல்வாங்க. இந்த மாதிரி…

எப்பவுமே நமக்கு அடுத்தவர் குறைகள்தான் கண்ணுக்குத் தெரியும். நம்ம குறைகள் வெளியே தெரியாது. இதைத்தான் பைபிளில் பிறர் கண்ணில் உள்ள தூசியைப் பார்க்காதே. உன் கண்ணில் உள்ள உத்தரத்தைப் பார்னு சொல்வாங்க. இந்த மாதிரி குறைசொல்வதில் இருந்து விடுபட சூப்பர் டிப்ஸ்கள்…

உலகத்தின் குறைகளை எல்லாம் கண்டுபிடிக்கும் சிலருக்கு. தன் குறைகள் மட்டும் தெரியாமல் போவதற்கு பெயர் தான் சுயநலம். இந்த உலகில் கிடைக்கும் அற்ப மரியாதைக்கும், போலி பெருமைக்கும், பகட்டு கௌரவத்திற்கும் ஆசைப்பட்டு உங்கள் “இயல்பான வாழ்வை” வாழாமல், சாகும் தருவாயில் வருத்தப்படாதீர்கள்.
இல்லாதவர்கள் தான் இருப்பதை பங்கிட்டு வாழ்கிறார்கள். இருப்பவர்கள் பதுக்கி மாய்கிறார்கள்.

மீதம் எவ்வளவு உள்ளது என்பது தெரியாமலே நாம் செலவு செய்வது தான் காலம். கண் சிமிட்டும் நேரத்தில் கூட மரணம் வரும் என்று உணர்ந்தவனே இங்கு மனிதனாகவும் மகானாகவும் இருக்க முடியும். அலைகளை சமாளிக்கும் மீன்களுக்கு வலைகளை எதிகொள்ளத் தெரிவதில்லை.

அழகென்று ரசிக்கப்படும் மழையே, அதிகமானால் வெறுக்கப்படும் போது அதிகமாக விரும்பப்படும் அன்பு என்ன விதிவிலக்கா? மனிதனின் மனம் கண்டறிய பணம் கருவியாகப் பயன்படுகிறது. பழக்கத்தின் அருமையும் பணத்தின் அருமையும் கடன் வாங்கிப் பார்த்தால் தெரிந்துவிடும். பிரச்சனைக்காக கடன் கேட்கும் போது பெறப்படும் பதில்களைப் பொறுத்து அமைகிறது நம் மீது மற்றவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை.

பணத்தை செலவு போக சேமிப்பு செய்யாமல், சேமிப்பு போக செலவு செய்தால் இடையில் வரும் இன்னல்களில் இருந்து தப்பிக்கலாம். வாழ்க்கை கடவுள் தந்த பரிசு. பிறரிடம் ஒரு கடும் சொல்லை சொல்லுமுன் வாய் பேச முடியாதவர்களை நினைத்து பாருங்கள்.

உங்கள் சாப்பாட்டை குறை கூறும் முன் சாப்பிடவே வழி இல்லாதவர்களை நினைத்து பாருங்கள். உங்கள் கணவரையோ அல்லது மனைவியையோ குறை கூறும் முன் வாழ்க்கை துணை வேண்டி வருந்துபவர்களை நினைத்து பாருங்கள். உங்கள் குழந்தைகளை குறை கூறும் முன் பிள்ளை வரம் வேண்டுபவர்களை நினைத்து பாருங்கள்.

உங்களுடைய வீட்டை குறை கூறும் முன் வீடில்லாமல் வீதிகளில் வசிப்பவர்களை எண்ணிப்பாருங்கள். உங்களுடைய வேலையை குறை கூறும் முன் வேலையில்லாமல் வாடுபவர்களை எண்ணிப் பாருங்கள். சோகத்தில் உங்கள் முகம் வாடும் பொழுது கடவுள் தந்த வாழ்க்கை என்ற பரிசுக்கு நன்றி சொல்லி முகத்தில் புன்னகை தவழ விடுங்கள்..