அறிவே இல்லையா? இந்திய ராணுவம் குறித்து உளறி கொட்டும் பாஜக அரசியல்வாதிகள்..!

  மத்தியப் பிரதேச பாஜக அரசியல்வாதிகள் சர்ச்சைகளை விட்டு விலக விடுவதாக தோன்றவில்லை. ஏற்கனவே விஜய் ஷா என்பவர் இந்திய ராணுவ வீராங்கனை சோபியா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் தற்போது துணை…

MP deputy cm

 

மத்தியப் பிரதேச பாஜக அரசியல்வாதிகள் சர்ச்சைகளை விட்டு விலக விடுவதாக தோன்றவில்லை. ஏற்கனவே விஜய் ஷா என்பவர் இந்திய ராணுவ வீராங்கனை சோபியா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் தற்போது துணை முதல்வர் ஜகதீஷ் தேவ்டா, “முழு நாடும், இந்திய ராணுவமும் பிரதமர் நரேந்திர மோடியின் காலடியில் நமஸ்காரம் செய்கின்றன” என்ற கூறி கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

ஜபல்பூரில் நடைபெற்ற குடிமக்கள் பாதுகாப்பு பயிற்சி நிகழ்ச்சியில் அவர் கூறிய இந்த கருத்து தவறான முறையில் விளக்கப்பட்டுள்ளது என்றும், காங்கிரஸ் இதை திசைதிருப்பி மக்களை திசை திருப்பிவிட்டது என்றும் அவர் மறுப்பி தெரிவித்துள்ளார்.

இந்த உரையால் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பாஜக அரசு, ஆடவர் உரிமைகள் அமைச்சர் விஜய் ஷா கர்னல் சோஃபியா குரேஷியை பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு பிறகு மேலும் சிக்கல்களை உருவாக்கியுள்ளது.

ஜகதீஷ் தேவ்டா உரையில் கூறியது இதுதான்:

“அந்த நாளிலிருந்து முழு நாட்டிலும் மக்கள் மனதில் பெரும் பதட்டம் இருந்தது. பெண்களின் சிந்தூரை அழித்த பயங்கரவாதிகள், அவர்களை வளர்க்கும் சக்திகள் அழிக்கப்படாமல் நமக்கு அமைதி இல்லை. இந்த செயலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே நாட்டின் உணர்வாக இருந்தது.”

பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி கூற விரும்புகிறோம். முழு நாடும், ராணுவமும், வீரர்களும் அவரது காலடியில் நமஸ்காரம் செய்கின்றனர்,” என அவர் கூறினார்.

இந்த கருத்துகள் நாட்டு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் ஷாவுக்குப் பிறகு, தற்போது ஜகதீஷ் தேவ்டா இந்திய ராணுவத்தை அவமதிக்கிறார். பாஜக உறுப்பினர்களின் கருத்துகள் தொடர்ந்து ராணுவத்தை தாழ்வாக காண்பிக்கும் வகையில் உள்ளன என காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா கூறியுள்ளார். “இந்த உரை இந்திய ராணுவ வீரர்களின் தைரியத்தையும் வீரத்தையும் அவமதிப்பதாகும். வெறும் ராஜினாமா கேட்டாலே போதாது, அவரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

இதையடுத்து தனது பேச்சு குறித்து ஊடகங்கள் முன் விளக்கம் அளித்த ஜகதீஷ் தேவ்டா, “நான் கூறியது, ‘பயங்கரவாதிகளுக்கு எதிராக ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடத்தி வீரர்களின் வீரத்தை நாடு வணங்குகிறது’ என்பதாகும். நாட்டின் மக்கள் வீரர்களை வணங்குகின்றனர் என்றே நான் கூறினேன். அதை பிரதமரை வணங்குகிறார்கள் என திரித்துவிட்டார்கள் என்று கூறினார்.

பாஜக ஊடகப் பொறுப்பாளர் அஷீஷ் அகர்வால் கூறியதாவது: “ஜகதீஷ் தேவ்டா ஜி கூறியது, ‘பாகிஸ்தானுக்குள் சென்று தாக்குதல் நடத்திய வீரர்களை முழு நாடும் வணங்குகிறது’ என்பதே உண்மை. அதை வேறு நோக்கில் காட்டுவது தவறு,” என்று கூறினார்.

ஆனால் பாஜக அரசியல்வாதிகளுக்கு அறிவே இல்லையா? ராணுவ வீரர்கள் குறித்து பேசும்போது கவனமாக இருக்க வேண்டாமா என நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.