என்னடா நடக்குது இங்கே.. பாகிஸ்தானுக்கு அடிக்கடி சென்ற அரசு ஊழியர்.. தீவிர விசாரணை..!

  பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக செய்ததாக சந்தேகப்பட்ட ராஜஸ்தான் மாநில அரசின் ஊழியர் ஒருவர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மேரில் பணியாற்றும் அந்த ஊழியர்,…

spy 1

 

பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக செய்ததாக சந்தேகப்பட்ட ராஜஸ்தான் மாநில அரசின் ஊழியர் ஒருவர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மேரில் பணியாற்றும் அந்த ஊழியர், தன்னுடைய துறையை தெரியப்படுத்தாமல் பாகிஸ்தான் சென்றுள்ளார். மேலும், அவர் ராஜஸ்தான் பகுதியில் சில அரசியல் தொடர்புகளும் வைத்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

அந்த ஊழியரின் அடையாளம் மற்றும் பாகிஸ்தான் பயண விவரங்கள் உடனடியாக உறுதியாகத் தெரியவில்லை.

தற்போது அவரிடம் போலீசாரும் பாதுகாப்பு முகவர்களும் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நடவடிக்கைகள், இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான சமீபத்திய பதற்றங்களை தொடர்ந்து, பாகிஸ்தானுக்காக உளவு சொன்ன குற்றச்சாட்டில் அதிகமான கைது சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் ஏற்பட்டுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, பாகிஸ்தானுக்காக உளவு சொன்னதாக தேசிய புலனாய்வு முகமை மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஒரு அதிகாரியை கைது செய்தது. மோதிராம் ஜாட் என்ற அந்த நபர், 2023 ஆம் ஆண்டிலிருந்து தேசிய பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தான் புலனாய்வுத் துறையினரிடம் பகிர்ந்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முந்தைய வாரம், இந்திய விமானப்படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையைப் பற்றிய முக்கிய தகவல்களை பாகிஸ்தான் முகவரிடம் பகிர்ந்ததாகக் கூறப்பட்ட ஒரு நபர், குஜராத்தில் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் சஹதேவ் சிங் கோஹில், கச்சில் வசித்து வரும் ஒரு சுகாதார பணியாளராக இருந்தவர் என்று குஜராத் பயங்கரவாத தடுப்பு படை மூத்த அதிகாரி கே சித்தார்த் தெரிவித்தார்.

அதேபோல் இந்த மாதம், யூடியூபர் ஜோதி மல்வோத்ரா என்ற பெண்ணும் இதே காரணத்திற்காக கைது செய்யப்பட்டார்.

போலீஸ் தரப்பின் தகவலின்படி, ஜோதி, 2023 நவம்பர் முதல் பாகிஸ்தான் உயர் ஆணையத்தில் பணியாற்றிய டானிஷ் என்பவருடன் தொடர்பில் இருந்துள்ளார் என கூறப்படுகிறது.

மொத்தத்தில் பாகிஸ்தானுக்காக வேலை செய்யும் தேச துரோகிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.