வெறுப்பு பேச்சால் எம்.எல்.ஏ பதவி பறிப்பு.. நீதிமன்ற உத்தரவால் தொகுதி காலியானதாக அறிவிப்பு..!

  உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் வெறுப்பு பேச்சு பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் எம்எல்ஏ…

abbas ansari

 

உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் வெறுப்பு பேச்சு பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் எம்எல்ஏ பதவியை இழந்தார் என்றும், அவரது தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மாவ் சர்தார் என்ற சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர் அப்பாஸ் அன்சாரி. இவர் வெறுப்புரை தொடர்பான வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, ஒரு எம்எல்ஏ இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றால் பதவி பறிபோகும் என்ற நிலையில், அவரது பதவி பறிபோனதாக அறிவிக்கப்பட்டு, அவரது தொகுதியின் காலியானதாக அறிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மூன்றாம் தேதி நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் அப்பாஸ் பேசியபோது சர்ச்சைக்குரிய வகையில் சில வார்த்தைகளை பேசியதாகவும், அவரது வெறுப்பு பேச்சு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டது. இது குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் தான் தற்போது தீர்ப்பு வந்துள்ளது என்பதும், அவர் மீதான நான்கு பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்கிலும் அவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு, இரண்டு பிரிவுக்கு இரண்டு ஆண்டுகள், ஒரு பிரிவுக்கு ஓராண்டு மற்றும் இன்னொரு பிரிவுக்கு ஆறு மாதம் என்றும், அனைத்து தண்டனைகளும் ஒரே நேரத்தில் அவர் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள சுசெல்தேவ் பாரதீய சமாஜ் கட்சியின் எம்எல்ஏ தான் அப்பாஸ் அன்சாரி என்பதும், இவரது கட்சி பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.