நாம் வீட்டில் இல்லாத போது, நமது வீட்டில் உள்ள பொருட்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வீட்டில் உள்ள நபர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதற்காகத்தான் ஒவ்வொரு வீட்டிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல குற்றங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன என்பதும், பல ஆபத்தான செயல்கள் கூட தடுக்கப்பட்டுள்ளன என்பதையும் பார்த்து வருகிறோம்.
குறிப்பாக, வெளிநாட்டிலிருந்து கொண்டு கூட நம்முடைய வீட்டை கண்காணிக்கலாம் என்பதும், நம்முடைய வீட்டில் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சிசிடிவி என்பது இன்றியமையாத ஒன்று என்ற நிலை உருவாகி வருகிறது. இந்நிலையில் திடீரென ஒரு தொழில்நுட்பம் புகழ் பெற்று வருகிறது. இந்த தொழில்நுட்பம் விரிவடைந்துவிட்டால், சிசிடிவி தேவையில்லாததாகிவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு வீட்டின் முழு பாதுகாப்பையும் Ringg AI தொழில்நுட்பம் தன் வசம் எடுத்துக்கொள்கிறது. வீட்டின் முன் ஒரு பார்சல் வந்தால், அந்த பார்சல் எப்போது வந்தது, யார் கொண்டு வந்தது என்பதை ஒரே ஒரு கேள்வி கேட்டாலே போதும். ரெக்கார்ட் செய்யப்பட்ட ஸ்மார்ட் வீடியோவின் மூலம் ஒரே நொடியில் அந்த பார்சல் வந்த நேரம், கொண்டு வந்து கொடுத்த நிறுவனம், கொண்டு வந்து கொடுத்த நபரின் முகம் ஆகிய அனைத்து தகவல்களும் நமக்கு கிடைக்கும்.
அது மட்டுமின்றி, நம்முடைய வீட்டின் வெளியே என்ன நடக்கிறது என்பதை தினந்தோறும் கண்காணித்து வீடியோவாக பதிவு செய்யும். நம்முடைய குழந்தைகள் பத்திரமாக பள்ளியில் இருந்து வந்துவிட்டார்களா, நம்முடைய செல்லப்பிராணி வெளியே ஓடாமல் பாதுகாப்பாக இருக்கிறதா, நம் வீட்டை யாராவது நோட்டம் விடுகிறார்களா, நம் வீட்டு அருகில் ஏதாவது விபத்து அல்லது விபரீதமான செயல்கள் நடந்ததா என்பதையும், பதிவு செய்யப்படும் வீடியோவிலிருந்து நாம் கேள்விகளை கேட்டே தெரிந்து கொள்ளலாம்.
இதனால் நேரம் மிச்சமாகும் என்பது மட்டுமின்றி, பதட்டமும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
Ringg AI, 2023ஆம் ஆண்டு பெங்களூருவில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தை 4 பேர் சேர்ந்து தொடங்கினர்.
1. காளிச்சரண் வேமுரு – IIT ஹைதராபாத் பழைய மாணவர்; Flipkart மற்றும் FlyWheel (acquired) நிறுவனங்களில் பணியாற்றியவர்.
2. உத்கர்ஷ் ஷுக்லா – BlinkIt மற்றும் Atlan நிறுவனங்களில் முன்னாள் தரவு அறிவியலாளர்; தற்பொழுது Desivocal.com நிறுவனத்தைக் நடத்துகிறார்.
3. அபிஷேக் சவுகான் – Zealth-AI (Y Combinator W21) நிறுவனத்தில் LLM மற்றும் backend systems மேல் கவனம் செலுத்தியவர்.
4. சரத் ராசபுடி – வணிக மேற்பார்வையும், தயாரிப்பு திட்டமிடலிலும் அனுபவம் கொண்டவர்.
இவர்கள் நால்வரும் AI தொழில்நுட்பங்களை உருவாக்கும் திறமையை கொண்டவர்கள்.
Ringg AI-யை மிகவும் நட்பாக உணரச்செய்வது, தன்னைத் தானே மேம்படுத்தி கொண்டு உங்கள் கேள்விகளை நன்றாக புரிந்துகொண்டு பதில் சொல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. UPS டிரைவரையும், தபால் ஊழியரையும் வேறுபடுத்தும். மேலும், சின்ன சின்ன நுணுக்கமான விஷயங்களை கூட வேறுபடுத்தி உங்களுக்கு தகவலாக சொல்லும்.
இது அடுத்த கட்ட வீட்டின் பாதுகாப்பு தொழில்நுட்பம் என்றும், காவல்துறைக்கும் பயன்படும் வகையில் பல்வேறு தகவல்களை சேமித்து வைத்து கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் சிசிடிவி தொழில்நுட்பத்திற்கு மாற்றானது என்றும் கருதப்படுகிறது.