பசும்பாலுக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய சிறந்த பால் எது? சோயா பால் பற்றி உங்களுக்கு தெரியுமா?

By Sowmiya

Published:

பெரும்பாலானவரின் அன்றாட உணவுப் பட்டியலில் நிச்சயம் பால் இடம் பெற்று விடும். உணவின் வாயிலாகவோ அல்லது டீ, காபி வடிவிலோ நிச்சயம் பாலினை ஒவ்வொரு தினமும் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம். இந்த பாலில் ஏராளமான நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றன.

பசும்பால் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஒரு அற்புதமான உணவு பொருள். ஆனால் சிலருக்கு பசும்பாலில் ஒவ்வாமை  அல்லது நனிசைவராக (விலங்குகளில் இருந்து பெறக்கூடிய பொருட்களை பயன்படுத்த விரும்பாதவர்களாக) இருக்கலாம் அல்லது வேறு சில காரணங்களுக்காக பசும்பாலை பயன்படுத்தாமல் அதற்கு மாற்றாக வேறு ஏதேனும் பாலை தேடுபவர் என்றால் உங்களுக்காக தான் இந்த பதிவு.

istockphoto 1196000665 612x612 1 1

சும் பாலை பயன்படுத்த வேண்டாம் என்று நினைக்கும் பலர் அதற்கு மாற்றாக பலவகை பொருட்களிலிருந்து கிடைக்கக்கூடிய பாலினை பயன்படுத்தி வருகிறார்கள் அவற்றுள் ஒன்றுதான் சோயா பால்.

சோயா பால் என்பது சோயா பீன்ஸ் இல் இருந்து பெறப்படக்கூடிய பால் ஆகும். சோயாபீன்ஸினை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து வடிகட்டி அதிலிருந்து சோயா பால் தயாரிக்கப்படுகிறது. கடைகளில் இனிப்பு சேர்க்கட்டும் இனிப்பு இல்லாமலும் கிடைக்கிறது.

சோயா பால் பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக உள்ளது. கார்போஹைட்ரேட், கால்சியம், பொட்டாசியம், புரதம், விட்டமின்கள், தேவையான அளவு கொழுப்பு ஆகியன சோயாபாலில் நிறைந்துள்ளன. இந்த சோயா பாலை டீ , காபி போன்றவற்றிலும் சமையல்களிலும் கூட உபயோகித்துக் கொள்ளலாம்.

istockphoto 1320624343 612x612 1 1

இந்த சோயா பால் ஒமேகா 3 அமிலம் நிறைந்ததாக உள்ளதால் மூளை வளர்ச்சிக்கு துணை புரிகிறது. இதில் கொழுப்பு குறைந்த அளவில் உள்ளது. ரத்த அழுத்தத்தை குறைக்க கூடியது. மேலும் ஆரோக்கியமான இதயத்திற்கு வழிவகுக்கிறது.

தினமும் சோயா பால் உட்கொள்வதன் மூலம் பல வகையான புற்றுநோய் தாக்கத்திலிருந்து காத்துக் கொள்ள முடியும். புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் எடை குறைப்பிலும் பெரிய அளவில் உதவி புரிகிறது. இதில் உள்ள கால்சியம் எலும்புகள் வலுப்பெற உதவுகிறது. சரும பராமரிப்பிலும் சிறப்பாக செயல்பட்டு சருமம் முதுமை அடைவதை தடுக்கிறது.

தினமும் சோயா பால் அருந்துவதால் முடி வளர்ச்சி மேம்படுகிறது.

இப்படி பல நன்மைகள் தரும் சோயாபாலினை தினமும் அருந்தி வர ஆரோக்கியம் மேம்படும் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

மேலும் உங்களுக்காக...