நரம்பு தளர்ச்சி நீங்க வேண்டுமா? தினமும் இந்த 20 வகையான இயற்கை உணவுகளை சாப்பாட்டுல சேர்த்துக் கொண்டு சாப்பிடுங்க. நரம்பு பலம் அதிகரித்து நரம்பு தளர்ச்சி ஓடிப்போய்விடும். வாங்க அது என்னென்ன வகையான உணவுன்னு பார்க்கலாம்.
5 பாதாமை தினமும் இரவு ஊற வைத்து காலை தோல் நீக்கி சாப்பிடுங்கள். நரம்புகளுக்குப் பலம் தரும். தினமும் 2 முதல் 3 வால்நட் சாப்பிட்டால் மூளை மற்றும் நரம்பு செயல்பாடு மேம்படும். ஒரு கைப்பிடி பிஸ்தா தினமும் சாப்பிட்டால் உடல் சக்தி அதிகரிக்கும். காலை வெறும் வயிற்றில் 1 முதல் 2 பூண்டு பல் தேனுடன் சாப்பிடலாம். தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் நரம்பு பலம் அதிகரிக்கும். தினமும் 2 முதல் 3 பேரீச்சம்பழம் சாப்பிட்டால் உடல் சோர்வு குறையும்.
காலை நேரத்தில் ஒரு சிறிய கிண்ணம் முளைகட்டிய பச்சைப்பயறு சாப்பிட்டால் நரம்பு பலம் கிடைக்கும். வாரத்தில் 2 முறை கருப்பு உளுந்து கஞ்சி செய்து குடிக்கலாம். ஒரு டீஸ்பூன் கருப்பு எள்ளும், தேனும் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் அதிகரிக்கும். ஒரு கைப்பிடி பூசணிக்காய் விதைகள் தினமும் சாப்பிட்டால் நரம்புகளுக்கு நல்லது.
தர்பூசணி விதையை வறுத்து பொடி செய்து பால் சேர்த்து குடிக்கலாம். சிறிதளவு பப்பாளி விதையை அரைத்து தேனுடன் கலந்து சாப்பிட, உடல் சக்தி அதிகரிக்கும். வாரம் 2 முதல் 3 முறை பசலைக்கீரையை சாப்பிட, ரத்த ஓட்டம் மேம்படும். முருங்கைக்கீரை கூட்டு அல்லது சாறு செய்து சாப்பிடலாம்.
தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் நரம்பு ஆரோக்கியம் மேம்படும். தினமும் காலை நேரத்தில் வெந்நீரில் 1 டீஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம். தினமும் இரவு ஒரு கப் சூடான பால் குடித்தால் நரம்பு தளர்ச்சி குறையும். தினமும் சிறிதளவு வெல்லம் சாப்பிட்டால் உடல் சக்தி கிடைக்கும். தினமும் பச்சை தேங்காய் சாப்பிட்டால் நரம்பு ஆரோக்கியம் மேம்படும். வாரம் 3 முறை வேக வைத்த கருப்பு சுண்டல் சாப்பிட்டால், உடல் பலம் அதிகரிக்கும்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



