ஜவான் படத்தில் அனிருத் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? தாறுமாறான வளர்ச்சி தான்..

Published:

ஷாருக்கான் நடிப்பில் ஜனவரியில் வெளியான பதான் படத்தின் அபார வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் அட்லியின் இயக்கத்தில் ஜவான் படத்தில் ஷாருக்கான் தற்பொழுது நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ஜவானின் டிரெய்லர் சமூகவலைத் தளங்களிலும் 100 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

மேலும் இந்த படத்தின் மூலம் நயன்தாரா கதாநாயகியாக இந்தியில் அறிமுகமாகிறார். அதை தொடர்ந்து இசை அமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இந்தியில் அறிமுகமாகும் முதல் படம் இது தான். தென்னிந்திய சினிமாவின் பிஸியான இசையமைப்பாளராக தற்பொழுது அனிருத் வலம் வருகிறார்.

தனது துள்ளலான இசை மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த அனிருத் 2012 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த 3 படத்தின் வை திஸ் கொலவெறி பாடல் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதை தொடர்ந்து அஜித், விஜய், ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் லியோ படத்தின் முதல் சிங்கிளான நா ரெடி பாடல் அனிருத் இசையில் வெளியாகி பிரபலமடைந்தது. அதை தொடர்ந்து ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் காவாலா பாடல் அனிருத் இசையில் உருவாக்கி பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.

அதை தொடர்ந்து அனிருத் ஜூனியர் என்டிஆரின் படத்திலும் , கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் அஜீத் குமாரின் விடாமுயற்சி ஆகிய படங்களில் பணியாற்றி வருகிறார். ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் நுழைந்த அனிருத் அடுத்தடுத்து ஹிந்தி படங்களில் ஒப்பந்தமாவாரா என்பது தெரியவில்லை.

மேலும் ஜவான் டிரெய்லருக்கு கிடைத்த வரவேற்பில் மகிழ்ச்சியடைந்த ஷாருக், அனிருத்துக்கு சமூக வலைதளங்களில் தனது நன்றியை தெரிவித்துள்ளார். தற்பொழுது அனிருத் இப்படத்தில் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு படத்திற்க்கு ரூ.8 கோடி சம்பளமாக வாங்குவதாகவும், தற்பொழுது அனிருத் அதை மிஞ்சி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது ​​ஜவான் படத்திற்கு அனிருத் 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளது.இந்த செய்தி தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் உங்களுக்காக...