தோனியிடம் ஆட்டோகிராப் வாங்கிய விக்னேஷ் சிவன்! நெகிழ்ச்சி பதிவு!

Published:

இயக்குனர் விக்னேஷ் சிவன் தோனி ஆட்டோகிராப் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு நெகிழ்ந்து உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தற்பொழுது வைரல் ஆகி அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் விக்னேஷ் சிவன் தனது instagram பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் விக்னேஷ் சிவன் அணிந்திருக்கும் டி-ஷர்டில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஆட்டோகிராப் போடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

இதனால் நெகிழ்ந்து போன விக்னேஷ் சிவன் தோனியின் கைகளில் முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கிரிக்கெட் வீரர் தோனி தனது மனைவி சாக்சி உடன் இணைந்து தோனி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தமிழில் எல்ஜிஎம் என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.

டோனியின் முதல் படத்தை ரமேஸ் தமிழ் மணி இயக்கத்தில், நடிகை நதியா, ஹரிஷ் கல்யாண், லவ்டூடே நாயகி இவானா, யோகிபாபு ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இசை வெளியீட்டுக்காக சென்னை வந்துள்ள தோனியை விக்னேஷ் சிவன் சந்தித்து ஆட்டோகிராப் பெற்றுள்ளார். இது குறித்து விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள பதிவில் என் ரோல் மாடலுடன் நான் இருப்பது மிகவும் மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் இவர் தமிழ் சினிமாவில் திரைப்படம் தயாரிக்க வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி என்றும் பதிவிட்டுள்ளார்

 

மேலும் உங்களுக்காக...