ஒரு குறிப்பிட்ட வயதை எட்டியதும் அதாவது 40 வயதுக்குப் பிறகு பெரும்பாலானவர்கள் மலச்சிக்கலால் அவதிப்படுவர். அதற்கு மிக முக்கியமான காரணம் நமது உணவுப்பழக்கம்தான். எப்படி அதில் இருந்து விடுபடுவது? அதற்கான நல்ல மருந்து என்னன்னு பார்க்கலாமா…
மலச்சிக்கல் தீரும், குடல் புண் ஆறும். இரத்தச் சோகை அதிக உடல் எடை குறையும். உடலில் அதிகப்படியாக உள்ள கொழுப்பு , வெளியேறும். நன்றாக காய வைத்த நெல்லி வற்றல்,கடுக்காய்த்தோல், மற்றும் தான்றிக்காய்த்தோல் பொடிகள் ,சம அளவில் கலந்ததே ,திரிபலா சூரணம்.
இதை, இரவில் ஒரு தேக்கரண்டி அளவு சுடுதண்ணீரில் கலந்து தினமும் சாப்பிட்டு வர , குடல் புண் ஆறும். இரத்தச் சோகை அதிக உடல் எடை குறையும்.உடலில் அதிகப்படியாக உள்ள கொழுப்பு , வெளியேறும் உடல் முதுமை மாறி, இளமைப்பொலிவு ஏற்படும். மலச்சிக்கல் தீரும்.திரிபலாவில் க்ரீன் டீயை விடவும் அதிக ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் உள்ளதாக ஆய்வு கூறுகிறது
ஆங்கில மருந்துகள் நிறைய உட்கொள்பவர்கள், இம்மருந்தினை காலை- இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம்.
திரிபலா குடல் அழற்சிக்குக்கூட நல்ல மருந்து. திரிபலாவை புறக்காயங்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தலாம். திரிபலா கலந்த கொதிக்கவைக்கப்பட்ட நீரால் காயங்களைக் கழுவதும் நல்ல பயன் தரும். அதேபோல வாய்ப்புண் வருகிற போதும் இதைப் பயன்படுத்தலாம்மேலும் சர்க்கரை நோய்க்கு இணை மருந்தாய் பயன்படுத்தலாம்
தொண்டை வலி:
சளி பிடிக்கிறதுக்கு ஒரு நாலைஞ்சு மணி நேரத்துக்கு முன்னாடி பாத்தீங்கன்னா தொண்டை ஒரு மாதிரி கரகரக்கும். அப்பவே தெரியணும், நமக்கு நாளைக்கு சளி பிடிக்கப் போவுதுன்னு. அந்த மாதிரி நேரத்துல நான் என்ன செய்வேண்டுமென்றல், கொஞ்சம் திரிபலாவை எடுத்து சுடுதண்ணியில போட்டு, நல்லா வாய் கொப்பளிக்க . சளி வராது. தொண்டைக்கும் இதமா இருக்கும். வாய் கொப்புளிச்சுத் துப்பத் தெரிந்த குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். முழுங்கினாலும் பெரிய பிரச்சினை இல்ல, இருந்தாலும் ரொம்ப சின்ன பிள்ளைங்களுக்கு வேணாம்.
பல் இடுக்குப் பிரச்சினை:
சில நேரம் பல்லிடுக்கில் உணவுத் துகள் மாட்டிக் கொள்கிறது. காரட் துண்டு, ஆட்டுக்கறி இப்படி. அப்போது கவனிக்காம விட்டுட்டா, அடுத்த நாள் வலிக்கும். அப்போ அந்தத் துணுக்கை floss போட்டு எடுத்துட்டாலும் வலிக்கும். அந்த நேரத்தில் திரிபலாவை சுடுதண்ணியில போட்டு வாய் கொப்பளிச்சா, அல்லது அந்த இடத்தில் வைத்து லேசாக பல் தேய்ப்பது போலத் தேய்த்தால் வலி மாயமாய்ப் போகிறது. மற்ற வகை பல்/ஈறு வலிகளுக்கும் இதைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.
திரிபலா பயன்கள்
திரிபலா என்பது அற்புதமான ஆயுர்வேத மருத்துவத் தயாரிப்பு ஆகும். ஆயுர்வேத மருத்துவர்களால், உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா. சர்க சம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில் முதல் அத்தியாயத்திலேயே திரிபலாவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும். நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய இம்மூன்றின் கலவையானது அற்புதமான காயகல்பமாகி, தேவர்களின் அமிர்தத்தினைப் போல் எந்த ஒரு வியாதியையும் தீர்க்கும் அற்புத சக்தியினைப் பெற்றுள்ளது.
நோய் எதிர்ப்புச் சக்தி, ஆன்டி-ஆக்ஸிடன்ட், செரிமானமின்மை, மலச்சிக்கல், வயிற்றுப் பூச்சிகளும் தொற்றுகளும், ரத்தசோகை, சர்க்கரை நோய், உடல்பருமன், சருமப் பிரச்சனைகள், சுவாசக் கோளாறுகள், தலைவலி, புற்று நோய் அகற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது.