இன்றைய காலகட்டத்தில் பணம் எல்லோருக்கும் அவசியமாகிவிட்டது. எவ்வளவுதான் பணம் வந்தாலும் மக்களுக்கு போதவில்லை. அடுத்தடுத்து என்ன செய்யலாம் எப்படி முன்னேறலாம் என்று யோசிக்க தான் செய்கிறார்கள். சிலர் கடுமையாக உழைப்பார்கள். பணம் இருப்பவர்கள் தொழிலில் முதலீடு செய்து முன்னுக்கு வருவார்கள். ஆனால் பணம் இல்லாதவர்களுக்கு தொழில் செய்வது என்று கடினமான காரியம் தான். ஆனால் ஒரு இளைஞர் ஒரு பைசா முதலீடு செய்யாமல் ரூபாய் 70,000 வரை சம்பாதித்திருக்கிறார். அது எப்படி என்று இனி காண்போம்.
உத்திரபிரதேச மாநிலத்தில் தற்போது நடந்து வரும் மாபெரும் திருவிழா தான் மகா கும்பமேளா. 144 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வருடம் மகா கும்பமேளா வைபவம் நடந்து கொண்டு இருக்கிறது. கோடிக்கணக்கான மக்கள் அன்றாடம் கங்கையில் புனித நீராடி வருகின்றனர். இந்த மகா கும்பமேளா இடத்தில் தான் ஒரு இளைஞர் ஒரு பைசா முதலீடு இல்லாமல் வேப்பங்குச்சிகளை விற்பனை செய்து ரூ 70,000 வரை சம்பாதித்து இருக்கிறார்.
இதை பற்றி அந்த இளைஞர் கூறுகையில் நான் வேப்பங்குச்சியை விற்பனை செய்து ரூ 70 ஆயிரம் வரை சம்பாதித்தேன். எனக்கு இந்த ஐடியாவை கொடுத்தது எனது காதலி தான். அவருக்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். இந்த வியாபாரத்தில் இவ்வளவு ரூபாய் லாபம் கிடைக்கும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த கும்பமேளா முடிவதற்குள் இன்னும் எனக்கு அதிக வருமானம் லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்று சந்தோஷத்துடன் பகிர்ந்து இருக்கிறார்.
ஒரு சிறிய ஐடியாவின் மூலம் இந்த இளைஞர் முன்னேறலாம் யார் வேண்டுமானாலும் சம்பாதிக்க முடியும் என்று நிரூபித்து காட்டியிருக்கிறார். அதாவது புத்திசாலித்தனமும் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் எந்த இடத்திலும் கூட நாம் சாதிக்கலாம் என்பதற்கு இந்த ஒரு சம்பவமே உதாரணமாக இருக்கிறது.