இன்றைய காலகட்டத்தில் உணவில் கலப்படங்கள் இருப்பதை நாம் மறக்க முடியாது. அதுபோல பலருக்கு பலவித நோய்கள் இருக்கிறது. குறிப்பாக சர்க்கரை நோய் இங்கு பலருக்கு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நம் உடலை பாதுகாக்க ஒரு சில வழிமுறைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டி இருக்கிறது. அந்த வகையில் வெதுவெதுப்பான நீரில் நெய்யை கலந்து குடிக்கும் போது அது பலவித ஆரோக்கிய நன்மைகளை நம் உடலுக்கு தருகிறது என்று கூறுகிறார்கள். அதைப் பற்றி இனி காண்போம்.
நெய் என்பது ஒரு சுத்தமான கொழுப்பு நிறைந்த உணவு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. நெய்யில் பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது. ஆயுர்வேதத்தில் நெய்க்கு என்று தனி சிறப்பு இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் விரும்பி எடுத்துக் கொள்ளும் ஒரு உணவு தான் நெய். இந்த நெய்யை காலை வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் கலந்து குடிக்கும் போது அது நமக்கு பலவித நன்மைகளை தருகிறது.
வெதுவெதுப்பான நீரில் நெய் கலந்து குடித்து வந்தால் நம் சருமம் பளபளப்பாவதோடு முடி வலிமை பெறும். இதில் அதிகப்படியான ஆன்டிஆக்சிடென்ட்கள் இருப்பதால் குடலில் இருக்கும் அழற்ச்சியை குறைத்து செரிமானத்தை பெருக்குகிறது. இதனால் ஆரோக்கியம் மேம்படுகிறது.
இது மட்டுமல்லாமல் வெதுவெதுப்பான நீரில் நெய் கலந்து குடித்து வரும்போது வாயு பிரச்சனை, மலச்சிக்கல் அசிடிட்டி போன்றவை வராது. அது மட்டும் இல்லாமல் இந்த முறையை பின்பற்றி வரும்போது நம் குடலை சுத்தப்படுத்துகிறது. மேலும் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது. நெய்யில் இருக்கும் ஆரோக்கியமான கொழுப்புகள் உடலில் இருக்கும் ஹார்மோன்களை சமன் செய்ய உதவுகிறது. இது போல பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதால் காலை வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் நெய்யை கலந்து குடித்து பயன்பெறுங்கள்.