சர்க்கரை நோயா, அடிவயிற்று வலியா, ரத்தக்குழாய்களில் கொழுப்பா? இதுதான் மாமருந்து!!

வீட்டிலேயே அன்றாடம் நம் சமையல் அறையில் பல மருந்துப்பொருள்களைத்தான் நாம் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அவற்றை நோயாளிகளுக்கு மருந்தாக எப்படி பயன்படுத்துவது என்று நமக்குத் தெரிய வேண்டும். ஒரு பொருளால் இவ்வளவு வியாதிகளுக்கு…

venthayam

வீட்டிலேயே அன்றாடம் நம் சமையல் அறையில் பல மருந்துப்பொருள்களைத்தான் நாம் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அவற்றை நோயாளிகளுக்கு மருந்தாக எப்படி பயன்படுத்துவது என்று நமக்குத் தெரிய வேண்டும். ஒரு பொருளால் இவ்வளவு வியாதிகளுக்கு மருந்து வெந்தயம் என்றால் நம்ப முடிகிறதா? வாங்க பார்க்கலாம்.

வெந்தயம் சர்க்கரைகுறைபாட்டை விரட்டும்: வெந்தயத்தை அப்படியே போட்டுக் கொண்டு தினமும் விளங்குவது ஒரு சிலர் பழக்கம் இன்னும் சிலர் வெந்தயத்தை லேசாக வறுத்து பொடி செய்து தினம் ஒரு ஸ்பூன் அளவில் சாப்பிடுவது என்ற பழக்கத்தை உடையவர்கள் ஆனால் இதையெல்லாம் தாண்டி கொஞ்சம் மெனக்கெட்டு வெந்தயத்தை முளைகட்டி பயன்படுத்தும் பழக்கத்திற்கு நாம் வரவேண்டும்.

வெந்தயத்தை தேவையான அளவு எடுத்துக் கொண்டு 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு அதை சுத்தமான துணியில் வடிகட்டி எடுத்து கட்டி 8 மணி நேரம் வைத்தால் முளைப்பு வந்துவிடும் ஒன்றரை சென்டிமீட்டருக்கும் சற்று அதிகமாக முளைப்பு வந்து விட்டால் அதில் இருக்கும். உங்களுக்கு பிடிக்காத கசப்பு சுவை நீங்கிவிடும்.

ஆனால் பலன் அதேதான் சாப்பிடுவதற்கு அவ்வளவு அருமையாக இருக்கும். ஆனால் 20 கிராம் அளவு போதுமானது. இதை இரவு நேரங்களில் படுப்பதற்கு முன்பு சாப்பிடலாம். அல்லது காலையில் உணவு உண்ட பிறகு சாப்பிடலாம். ஏனென்றால் இரவில் சாப்பிட்ட உணவுக்கு வேலை இல்லை என்பதால் சர்க்கரை அதிகமாகும். அதை கட்டுக்குள் வைக்க இது மிகவும் பயன்படும்..

காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் லோ சுகர் ஆகும் என்பதால் காலை சிற்றுண்டி முடித்த பிறகு கூட சாப்பிடலாம். இதய பாதுகாப்பிற்கு இது மிகப் பெரிய உறுதுணையாக இருக்கிறது என்று சொல்கிறது முக்கியமாக ரத்தக் குழாய்களில் கொழுப்பு சேருவதை இது தடுக்கிறது. உங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வெந்தயம் பயன்படுகிறது அது மட்டுமல்ல அதிகப்படியான எடை இருப்பவர்கள் தொடர்ந்து சாப்பிட்டால் எடை குறைந்து உங்களை ஸ்லிம் அண்ட் பிட்டாக காட்டும்.

வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து தலைக்கு தடவிக் கொண்டாலும் முடி உதிர்தல் பிரச்சனை தீர்க்கப்படும் உங்கள் இரும்பு சத்து அளவை சரி செய்து உங்களை இரும்பு மனிதர்களாக உலா வரச் செய்யும் மேஜிக்கை செய்கிறது அதனால் இதை மேஜிக்கல்சீட்ஸ்னும் சொல்வாங்க. வெந்தயம். மாதவிடாய் காலங்களில் அடிவயிற்று வலி வயிற்றுக் கடுப்பு போன்றவற்றால் அவதியுறும் பொழுது அந்த நாட்களில் முளை கட்டிய வெந்தயம் பலன் தரும். மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து ஆரம்பித்து அதன் முற்றிய நிலையான மூலநோய் வரை சரி செய்யும்.