என் பேரன் ஜேசன் சஞ்சய் முதல்ல இந்த நடிகரை வைத்து தான் படம் எடுப்பேன்னு சொன்னான்… S A சந்திரசேகர் பகிர்வு…

தமிழ் சினிமாவில் முன்ணனி நடிகராக இருந்து வருபவர் விஜய். இவரது தந்தை S A சந்திரசேகர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.…

jason sanjay

தமிழ் சினிமாவில் முன்ணனி நடிகராக இருந்து வருபவர் விஜய். இவரது தந்தை S A சந்திரசேகர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் விஜய்.

தொடர்ந்து 1990களில் தனது 18 வது வயதில் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் விஜய். ஆரம்பத்தில் குடும்பக் கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். 2000 காலகட்டத்திற்கு பிறகு சமூக நீதி கருத்துக்கள் கொண்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகராக ஆனார் விஜய். 2010 காலகட்டத்திற்கு பிறகு விஜய் நடித்து வெளிவந்தாலே அந்த படம் ஹிட்டுதான் என்ற அளவுக்கு புகழின் உச்சிக்கு சென்றார் விஜய்.

தற்போது தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக இருந்த போதும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பிய விஜய் அரசியலில் இறங்கபோவதாக கூறி தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அதன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தான் இறுதியாக கமிட்டான ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு முழுநேர அரசியல்வாதியாக மாறப்போவதாக கூறியிருக்கிறார்.

இந்நிலையில் விஜய் சினிமாவை விட்டு வெளியேறும் இந்த சமயத்தில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் நுழைந்திருக்கிறார். அவர் ஹீரோவாக வலம் வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவர் இயக்குனராகப் போவதாக அறிவித்து லைக்காவுடன் இணைந்து ஒரு படம் இயக்கிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் தந்தை S A சந்திரசேகர் ஒரு நேர்காணலில் தனது பேரன் ஜேசன் சஞ்சயை பற்றி பகிர்ந்து இருக்கிறார்.

S A சந்திரசேகர் கூறியது என்னவென்றால், என்னுடைய பேரன் ஜேசன் சஞ்சயிடம் நீ சினிமாவில் என்னவாக ஆகப்போகிறாய் என்று கேட்கும்போது அவன் நான் இயக்குனராக போகிறேன் என்று கூறினான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் அவன் ஹீரோவாக வருவான் என்று நினைத்தேன். அப்போது அவன் கூறியவுடன் நீ உன் அப்பாவை வைத்து தான் படம் எடுக்க போகிறாயா என்று கேட்டேன். அவன் இல்லை என்னுடைய முதல் படம் விஜய் சேதுபதியை வைத்து தான் எடுப்பேன். நான் ஹிட்டு கொடுத்த பிறகு என் அப்பா என்னிடம் வந்து கால்ஷீட் கேட்க வேண்டும் அந்த அளவுக்கு வருவேன் என்று பேசினார். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது என்று மனம் திறந்து பகிர்ந்து இருக்கிறார் S A சந்திரசேகர்.