வயதானால் ஒவ்வொரு நோயாக எட்டிப் பார்க்க ஆரம்பித்து விடுகிறது. ஆனால் நாம்தான் எடுத்ததெற்கெல்லாம் ஆங்கில மருந்துகளை நாடி ஓடுகிறோம். இயற்கை மருந்துகள் நிரந்தரமான தீர்வைத் தரும் என்பதை எவ்வளவு சொல்லியும் கேட்காதவர்கள் ஒரு கட்டத்தில் அதையே நாடுகின்றனர்.
அந்த வகையில் வயதானவர்களுக்கு சிறுநீர் திடீரென வந்து விடும். அதை அடக்க முடியாது. அதன்பிறகு அவர்கள் என்ன செய்வதுன்னு தெரியாமல் சங்கடப்படுவர். இவர்களுடைய இந்தப் பிரச்சனையை அவர்களால் வெளியே யாரிடமும் சொல்லவும் முடியாது. இவர்கள் செய்ய வேண்டிய விஷயம் என்ன? வாங்க பார்க்கலாம்.
கிட்னியால் ஃபில்டர் செய்யப்பட்ட சிறுநீர் நேராக வெளியேற்றப்பட மாட்டாது. அது நேராக சிறுநீர் பையில் வந்து சேரும். அந்த சிறுநீர் பை நிறைந்தவுடன் தான் நமக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வே தோன்றும். இது ஆரோக்கியமாக இருக்கும் அனைவருக்கும் பொருந்தும்.
ஆனால் மேற்குறிப்பிட்ட நபர்களுக்கு சிறுநீர் பை பலஹீனமடைந்து சிறுநீரை அதிக அளவு தேக்கி வைக்கும் திறனை இழந்து விடும். இதனால் கொஞ்சமாக சிறுநீர் பையில் சேர்ந்தாலும் அதன் கனத்தை தாங்க முடியாமல் உடனே வெளியேற்ற துடிக்கும். எனவேதான் மேற்கூறப்பட்ட நபர்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியுள்ளது.
இதற்கு என்ன செய்ய வேண்டும். சிறுநீர் பையை பலப்படுத்த வேண்டும். அதன் தாங்கும் சக்தியை அதிகரிக்க வேண்டும். அப்படி செய்து விட்டால் அடிக்கடி சிறுநீர் வெளியேறாது.
இதற்கு மிகச்சிறந்த மருந்து பாலாக்கீரை. இதனை உணவில் தொடர்ந்து சேர்த்து சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனையிலிருந்து முழுமையாக விடுபடலாம். கீரையை சமைத்து சாப்பிட் விருப்பம் இல்லாதவர்கள் கீழ்க்கண்டவாறு சூப் வைத்து சாப்பிடலாம்.
பாலாக்கீரை 5 இதழ்களை நன்றாக சிறுசிறு துண்டுகளாக வெட்டி 200 மில்லி தண்ணீரில் போட்டு ஒரு ஸ்பூன் சீரகம்,ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்,சிறிது உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து தண்ணீர் பாதியாக வற்றியதும் காலை மற்றும் மாலை என இரண்டு வேளை 15 நாட்கள் குடித்து வரவும். இந்த பிரச்சனையிலிருந்து முழுமையாக விடுபடலாம்.