சர்க்கரை நோயா… பயமே வேண்டாம்… இதைச் சாப்பிடுங்க… கன்ட்ரோல் ஆகிடுவீங்க!

நம்மில் அதிகமானோர் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்று நீரிழிவு நோய் தான். இந்த நோய் வருவதற்கு மிக முக்கியமான காரணமே நமது உணவு முறைதான். இன்று பலரையும் அடிமைப்படுத்தி தன கட்டுக்குள் வைத்திருக்கும் நோய்களில் முதன்மையான…

athalakkai

நம்மில் அதிகமானோர் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்று நீரிழிவு நோய் தான். இந்த நோய் வருவதற்கு மிக முக்கியமான காரணமே நமது உணவு முறைதான். இன்று பலரையும் அடிமைப்படுத்தி தன கட்டுக்குள் வைத்திருக்கும் நோய்களில் முதன்மையான நோயாக உள்ளது நீரிழிவு நோய் தான். அதற்கான அருமையான தீர்வைத் தருவது அதலக்காய்தான். வாங்க என்ன விவரம்னு பார்ப்போம்.

அதலக்காயை பொறுத்தவரையில், உலகத்தில் எந்த நாட்டிலும் விளையாத ஒரு காய். தமிழ்நாட்டில் மட்டும் விளையக்கூடியது. துத்தநாகம், வைட்டமின்சி, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இதில் அதிகமாக உள்ளது.

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அதலைக்காய் ஒரு சிறந்த மருந்து. இதில் உள்ள சத்துக்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, சர்க்கரை நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துகிறது.

மஞ்சள்காமாலை பிரச்னை உள்ளவர்களுக்கு அதலக்காய் ஒரு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் இந்த காயை தினந்தோறும் அவர்களது உணவில் சேர்த்துக் கொண்டால் மஞ்சள் காமாலை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

உடல் எரிச்சல் பிரச்னை உள்ளவர்கள் அதலக்காயை தினந்தோறும் தங்களது உணவில் சேர்த்து வந்தால், உடல் எரிச்சல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

குடற்புழு பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த காய் ஒரு சிறந்த மருந்தாகும். இதில் உள்ள சத்துக்கள் நமது வயிற்று பிரச்சனையை தீர்ப்பதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. இது வயிற்றில் காணப்படும் கிருமிகளை அளிப்பதோடு, குடற்புழு பிரச்சனைகளையும் சரி செய்கிறது.

பாகற்காயைப் எப்படி பொரியல் மறறும குழம்பு வைத்து சாப்பிடுகிறோமோ, அப்படி இந்தக் காயை சாப்பிடலாம் வற்றலாகவும் பயன்படுத்தலாம்.