மாரடைப்புல இறப்பவர்களை நல்ல சாக்காலம்னு சொல்வாங்க. அது யாருக்கும் எந்தத் தொல்லையும் தராது. இறப்பவர்களையும் ரொம்ப நேரம், ரொம்ப நாளா உயிருக்குப் போராட வைக்காது. டக்குன்னு வரும். பொட்டுன்னு போட்டுடும். அது வயதானதும் வந்தால் யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை.
இளம் வயதினருக்கு வருவது தான் பெரும் சோகம். சரி அதுக்கு அறிகுறி தெரிஞ்சிடுச்சு. இனியாவது உயிரைக் காப்பாற்றுங்க.மாரடைப்பு வருவதற்கு 30 நாள்களுக்கு முன்பே நமக்குத் தென்படும் அறிகுறிகள் பல உள்ளன. அவற்றைப் பார்க்கலாமா.
இன்று வயது வித்தியாசம் பாராமல் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை தாக்கும் மிகப்பெரிய நோய் என்னவென்றால் அது மாரடைப்பு தான். 30 நாள்களுக்கு முன்பே நமக்கு மாரடைப்புக்கான சில அறிகுறிகள் தென்பட்டு விடும் என்கிறார்கள். வாங்க என்னன்ன அவைன்னு பார்க்கலாம்.
உடற்சோர்வு மற்றும் பலவீனம், தலை சுற்றுதல், சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை முக்கிய அறிகுறிகள்.மார்பு வலி, அழுத்தம் மற்றும் அதன் கனத்தை உணரலாம். கை, கால், தோள், தாடையில் வலி வரலாம். மார்பு, தோள்பட்டை, தாடையில் வலி வரலாம். இப்படி வந்துச்சுன்னா உடனே டாக்டரிடம் போயிடுங்க.
மாரடைப்பு வர்ற முன்னாடி உடல் சோர்வு வரும். வேலை செய்யாமலேயே இப்படி வரும். உஷார். அதே போல தலைசுற்றல், மயக்கம், மூச்சுத்திணறல், ரத்தம் வரும். இது ரத்த ஓட்டம் குறைவதால் வரும். இது இருந்தாலும் டாக்டரிடம் போயிடுங்க.
ஆரோக்கியமான உணவு முறைகளும், உடற்பயிற்சியும்தான் மாரடைப்பைத் தவிர்க்கும் வழிமுறைகள். அதாவது கொழுப்பு குறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகளையே அதிகம் உண்ண வேண்டும்.
முக்கியமாக உப்பு, சர்க்கரையின் அளவைக் குறைக்க வேண்டும். அதே போல வாரத்திற்கு 150 நிமிடங்களாவது வாக்கிங், சைக்கிள் ஓட்டுதல்னு உடற்பயிற்சி செய்வது நல்லது. புகை, மதுவைத் தவிர்த்து யோகா, தியானம் செய்யுங்கள்.