சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இருக்கும் மருத்துவ மூலிகையில் ஒன்று ஏலக்காய். இதை ‘மசாலாக்களின் ராணி’ன்னு சொல்வாங்க. இதுல பவிதமான மருத்துவக் குணங்கள் இருக்கு. புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் என 100 கிராம் ஏலக்காயில் 311 கிலோ கலோரி வரை இருக்கிறது. ஏலக்காய் விதைகள் சமையலுக்கும், நறுமணப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. வைட்டமின் ஏ, சி, கால்சியம், சோடியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, காப்பர், மாங்கனீஸ் உள்பட பல சத்துக்கள் உள்ளன.
இதைத் தினமும் உணவில் சேர்த்து வர ரத்த அழுத்தத்தால் எந்தப் பாதிப்பும் வராது. ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. சிறுநீரை பெருக்குகிறது. உடலில் உள்ள கழிவுகளை அகற்றுகிறது. செரிமானத்திற்கு உதவுகிறது. கெட்ட பாக்டீரியாக் களை உடலில் இருந்து அழிக்க போராடுகிறது. வாயுப்பிரச்சனையைத் தீர்க்கிறது. சுவாசப்பிரச்சனை உள்ளவர்கள் இதைச் சாப்பிட்டு வந்தால் தீர்வு கிடைக்கும். மன அழுத்தம் குறைகிறது.
ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிட ஜீரணக் கோளாறு குணமாகும் பசியின்மை நீங்கும். உடலில் மெட்டபாலிசம் அதிகரிக்கும். வயிற்று வலி வயிறு உப்புசம் போன்றவைகள். நீங்கும்.அதன் பிறகு மூச்சு விடுவதில் சிரமம், தொடர்ந்து இருமல் வருதல், நெஞ்சு சளி போன்றவைகள் நீங்கும். அதனை அடுத்து ஏலக்காய் மென்று சாப்பிட்டு வர வாய் துர்நாற்றம் நீங்கும்.
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். பிறகு ஒரு சிலர் பயணம் செய்யும் பொழுது வாந்தி மயக்கம் போன்றவைகளால் அவதிப்படுவார்கள் அதனை முற்றிலும் தடுப்பதற்கு ஏலக்காயை மென்று சாப்பிட வேண்டும்.