பிரபல நடிகருக்கு பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய தடை.. மனைவிக்கும் தடை.. செபி அதிரடி முடிவு..!

  இந்திய பங்குச் சந்தையின் செபி பாலிவுட் நடிகர் அர்ஷத் வார்ஸி மற்றும் அவரது மனைவி மரியா கோரெட்டி ஆகியோருக்கு ஒரு ஆண்டு காலம் பங்குச் சந்தையில் பங்கேற்க தடை விதித்துள்ளது. செபி நடத்திய…

arshad

 

இந்திய பங்குச் சந்தையின் செபி பாலிவுட் நடிகர் அர்ஷத் வார்ஸி மற்றும் அவரது மனைவி மரியா கோரெட்டி ஆகியோருக்கு ஒரு ஆண்டு காலம் பங்குச் சந்தையில் பங்கேற்க தடை விதித்துள்ளது.

செபி நடத்திய விசாரணையில், இந்த ஜோடி ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகளை பற்றி தவறான விளம்பர வீடியோக்கள் மற்றும் மாயமான வர்த்தகம் மூலம் அதிக லாபம் ஈட்டியதாக கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த செய்தியை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் முதலில் Pump and Dump திட்டம் என்றால் என்ன? என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இது பங்குச்சந்தையில் நடைபெறும் ஒரு மோசடி முறையாகும், இதில் சிலர் குறைந்த மதிப்புள்ள பங்குகளை பற்றி தவறான தகவல்களை பரப்பி அதன் விலையை செயற்கையாக உயர்த்துகிறார்கள். பிறகு, அவர்கள் அந்த பங்குகளை உயர்ந்த விலையில் விற்றுவிட்டு, பங்கின் விலை வீழ்வதற்கு இடமளிக்கிறார்கள்.

உதாரணமாக: ஒரு பங்கின் விலை ₹10 என்றால், அவர்கள் முதலில் அதிகம் பங்குகளை வாங்கி, பிறகு யூட்யூப், சமூக ஊடகங்கள் போன்றவற்றில் “இந்த பங்கு ₹100 வரை போகும்!” என பொய்யான தகவலை பரப்பி, விலையை ₹50க்கு உயர்த்துகிறார்கள். பிறகு அவர்கள் விற்றுவிட, புதிய முதலீட்டாளர்கள் இழப்புகளை சந்திக்கிறார்கள்.

2022ஆம் ஆண்டிலேயே இதேபோன்ற சில புகார்கள் வந்தன. செபி நடத்திய விசாரணையில், மார்ச் முதல் நவம்பர் 2022 வரை ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் வர்த்தகங்கள் முறை தவறானவையாக இருந்தது உறுதி செய்யப்பட்டது.

நிறுவனத்தின் பங்குகளை அதன் சொந்த பங்குதாரர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் குறைந்த அளவில் அதிக விலையில் பரிமாறிக் கொண்டனர். அதன்பின்னர் பங்கின் விலையை உயர்த்த யூட்யூப் சேனல்கள் மூலம் தவறான விளம்பர வீடியோக்கள் வெளியிடப்பட்டன. இதனால் சாதாரண முதலீட்டாளர்கள் தவறான நம்பிக்கையுடன் பங்குகளை வாங்கினர். பின்னர் அவர்கள் பங்குகளை விற்று பெரிய அளவில் லாபம் ஈட்டினர். பங்கின் விலை வீழ்ந்ததால், புதிய முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை இழந்தனர்.

இப்படி செய்த மோசடியில் தான் பாலிவுட் நடிகர் அர்ஷத் வார்ஸி மற்றும் அவரது மரியாவின் பங்குகள் மூலம் லட்சக்கணக்கில் லாபம் பெற்றனர். செபி : இருவருக்கும் ₹5 லட்சம் அபராதம் விதித்ததோடு, 1 ஆண்டு பங்குச் சந்தையில் பங்கேற்க தடை விதித்தது.

இதுபோன்ற மோசடிகள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என செபி கூறியுள்ளது.