பலநோய்களுக்கும் கைகண்ட மருந்து ஆவாரம்பூ… இவ்ளோ பலன்களா?!

ஆவாரம்பூவு ஆறேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு… என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்குன்னு ஒரு இனிய காதல் பாடல் உண்டு. இந்தப் பாடல் இடம்பெற்ற படம் அச்சமில்லை அச்சமில்லை. பி.சுசீலா, எஸ்பிபி…

avarampoo

ஆவாரம்பூவு ஆறேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு… என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்குன்னு ஒரு இனிய காதல் பாடல் உண்டு. இந்தப் பாடல் இடம்பெற்ற படம் அச்சமில்லை அச்சமில்லை. பி.சுசீலா, எஸ்பிபி இணைந்து பாடிய சூப்பர்ஹிட் மெலடி. இந்தப் பாடலில் வரும் ஆவாரம்பூ அவ்வளவு சாதாரணமான மலர் அல்ல. ஏகப்பட்ட வியாதிகளைப் போக்கக்கூடியது. வாங்க பார்க்கலாம்.

ஆவாரைச் செடியில் எல்லாவிதப்பாகங்களுமே மருத்துவத்தில் பயன் அளிப்பதாகும். ஆவாரம் பூ ஆண்குறிஎரிச்சல் ஆகிய குறைபாடுகள் இருந்தால் ஆவாரம் பூவை மணப்பாகு செய்து சாப்பிட்டால் நிவர்த்தியாகும்.

உடலில் நமைச்சல் இருந்தால் ஆவாரம் பூவுடன் பச்சைப்பயறு சேர்த்து அம்மியில் வைத்து அரைத்து உடலில் தேய்த்துக் குளித்தால் குணமாகும். நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் அருமருந்தாக ஆவாரம் விதை விளங்குகிறது.

எலும்புருக்கி நோயினால் அவதிப்படுபவர்களுக்கு ஆவாரம் இலைச் சாறு மாமருந்தாக விளங்குகிறது. ஆவாரம் இலைகளைத் தேவையான அளவுக்குக் கொண்டுவந்து குளிர்ச்சியான தண்ணீரைத் தெளித்து, இடித்து சாறாகப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். இந்த சாறை அரைலிட்டர் அளவுக்கு எடுத்துக் கொண்டு தினசரி காலை, மாலை என இருவேளை குடித்துவரவும். இதனால் எலும்புருக்கி எனும் நோய் நீங்கும்.

எத்தனையோ நோய்களுக்கு மாமருந்தாக ஆவாரம்பூ விளங்குகிறது. சாலையோரம் நிறைய தடவை நாமும் போகும்போதும், வரும்போதும் பார்க்கத்தான் செய்கிறோம். இனியாவது நமக்கு மட்டும் இல்லாமல் பிறருக்கும் பயன்படும்பொருட்டு இந்தப் பூவின் அருமைகளை எடுத்துச் சொல்வோம். அவர்களுக்கு நோய் எனில் அந்தப் பூவைப் பறித்துக் கொடுத்து அதை எப்படிப் பயன்படுத்துவதுன்னு விளக்குவோம்.