ஒரு சினிமா வெற்றி பெறுமா? தோல்வி அடையுமா? ஆய்வு செய்து டாக்டர் பட்டம் வாங்கிய இயக்குனர் யூகிசேது..!

By Bala Siva

Published:

ஒரு சினிமா வெற்றி பெறுமா? அல்லது தோல்வி அடையுமா? என்பதை யாராலும் யூகிக்க முடியாது என்றும் அப்படி ஒருவர் இருந்தால் அவரை கோடிக்கணக்கான ரூபாய் சம்பளம் கொடுத்து வைத்திருப்போம் என்றும் கமல்ஹாசன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

ஒரு சினிமாவை தயாரிக்கும் போது நாங்கள் நன்றாக தான் உருவாக்குவோம். கண்டிப்பாக அது பாமர ரசிகர்கள் முதல் நகர ரசிகர்கள் வரை பிடிக்கும் என்றுதான் எதிர்பார்ப்போம். ஆனால் திரைக்கு வந்த முதல் நாள், நாங்கள் செய்தது தவறு என்ன என்று தெரியவரும் என பல இயக்குனர்கள் தங்கள் படங்கள் தோல்வி அடைந்தபோது பேட்டி அளித்துள்ளனர்.

கே.பாலசந்தர் படத்தில் அறிமுகம்.. கமல் ரஜினியுடன் நடிப்பு.. நடிகர் திலீப் திரை பயணம்..!

அந்த வகையில் தமிழ் சினிமா மட்டுமின்றி உலக சினிமாக்களை ஆய்வு செய்து ஒரு படம் வெற்றி அடையுமா? தோல்வியடைமா? என்பதை முன்கூட்டியே ஓரளவுக்கு கணிக்க முடியும் என்று கூறியவர் தான் நடிகர் இயக்குனர் யூகிசேது. இவர் ஒரு திரைக்கதை வெற்றி பெறுமா தோல்வி அடையுமா என்பதை ஆய்வு செய்து டாக்டர் பட்டமும் பெற்று உள்ளார்.

நடிகர் யூகிசேது கவிதை பாட நேரமில்லை என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் அமலா முக்கிய கேரக்டரில் நடிக்க ரகுவரன், நாசர், யூகிசேது ஜெய்கணேஷ் உள்பட பலர் நடித்திருந்தனர். பெரிய அளவில் ஸ்டார் வேல்யூ இல்லை என்றாலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதன் பிறகு இவர் திரைப்படங்கள் இயக்கவில்லை என்றாலும் சில படங்களில் நடித்தார்.  சில படங்களுக்கு திரைக்கதை எழுதி கொடுத்தார் அந்த வகையில் அவர் திரைக்கதை எழுதி கொடுத்த படங்கள் தான் அஜித் நடித்த வில்லன் மற்றும் அசல் ஆகிய படங்கள்.

இவர்தான் ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆகும் முன்னரே அந்த படம் வெற்றி பெறுமா, இல்லையா என்பதை கணிக்கும் கட்டுரை எழுதி அதில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். இவர் இதற்காக ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் பார்த்ததாகவும் அதிலிருந்து ஒரு தெளிவு தனக்கு கிடைத்ததாகவும் கூறியுள்ளார்.

சென்னையில் ஒரு சீனுக்கு கைதட்டல் கிடைத்தால் அதே சீனுக்கு நெல்லையிலும் கைதட்டல் கிடைக்கிறது என்ற போது பார்வையாளர்கள் மனம் ஒரே கோணத்தில் தான் இருக்கிறது என்பதை அவர் கண்டுபிடித்தார்.

பாரதிராஜா அறிமுகம் செய்த ஹீரோ.. தெலுங்கில் காமெடி நடிகர்.. சுதாகர் கடந்து வந்த திரை வாழ்க்கை..!!

ஒரு படம் முடியும் முன்பே கோவையில் ஒரு ரசிகர் எழுந்து வெளியே சென்றார் என்றால் அதே மாதிரி இது தஞ்சாவூரிலும் நடக்கிறது என்றும் அதை பார்த்து வெற்றி படங்களுக்கு என்று ஒரே பேட்டர்ன் தான் இருக்கிறது என்றும் அவர் யூகித்தார்.

நூற்றுக்கான படங்கள் பார்த்த பின் அவர் சென்னை பல்கலைக்கழகத்தில் தனது ஆய்வு கட்டுரையை வழங்கி டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இவருடைய கூற்றின்படி ஒரு படத்தை வெற்றி படமா அல்லது தோல்வி படமா என்பதை முன்கூட்டியே நிர்ணயிக்க முடியாது என்றாலும் ஒரு திரைக்கதை ஓடுமா ஓடாதா என்பதை கணிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

உதாரணமாக கமல்ஹாசன் நடித்த குணா திரைப்படம் ஏன் தோல்வி அடைந்தது என்பதை அவர் கூறியுள்ளார். பொதுவாக ஒரு படத்தின் திரைக்கதை என்பது நேராக சொல்லப்படுகிறதா அல்லது மறைமுகமாக சொல்லப்படுகிறதா, அந்த திரைக்கதையில் என்டர்டைன்மென்ட் அதிகம் இருக்கிறதா என்பது முக்கியம்.

இதுகுறித்து கூறிய அவர் குணா திரைப்படத்தை பொறுத்தவரை நல்ல கதை, ஆனால் அதில் கிளைக் கதைகள் அதிகம் என்று கூறியதோடு, இந்த படத்தில் கதையின் நாயகன் கேரக்டர் தான் பிரச்சனை என்று கூறியுள்ளார். 150 படங்களுக்கு மேல் நடித்த ஒரு நடிகனை அசிங்கமாக பார்க்க மக்கள் தயாராக இல்லை என்றும் எனவே கமல்ஹாசன் தனது கெட்டப் தேர்வு செய்தது மிகப்பெரிய தவறு என்றும் அவர் கூறியிருந்தார்.

அதேபோல் ஒரு திரைப்படத்தில் நெகட்டிவ் கிளைமாக்ஸ் இருந்தால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள தயங்குவார்கள் என்றும் மற்ற கமல் கேரக்டரை பொருத்தவரை குணா படத்தில் சிறப்பம்சங்கள் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

உதாரணமாக அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ளமாக, மைக்கேல் மதன காமராஜன் படத்தில் நான்கு வேடங்களில் நடித்தது எல்லாம் சிறப்பு அம்சம் என்றால் குணாவில் அப்படி கிடையாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அதே நேரத்தில் இந்த பாயிண்டுகள் எல்லாமே தனுஷின் காதல் கொண்டேன் படத்தில் இருக்கிறதே என்று கேட்டபோது தனுஷுக்கு இமேஜ் கமலஹாசன் போல் இந்த படத்தில் நடிக்கும் போது கிடையாது என்றும் பார்வையாளர்களுக்கு அவர் இறுதியில் சாவதில் எந்த பிரச்சனை இல்லை என்றும் ஒரு படம் வெளியாகும் நேரம் என்பது மிகவும் முக்கியம் என்றும் தெரிவித்திருந்தார்.

காதல் கொண்டேன் திரைப்படம் இன்றைய நேரத்தில் வெளியானால் அந்த படம் நிச்சயம் ஓடாது என்றும் அவர் குறிப்பிட்டார். அதேபோல் ரஜினியின் குசேலன் உட்பட பல படங்கள் ஏன் தோல்வி அடைந்தது என்பதை அவர் அலசி ஆராய்ந்து தனது ஆய்வு கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக நடித்து பெரும் பணம்.. இப்போது கூலி வேலை.. நடிகர் ஹாஜா ஷெரிப்பின் கதை..!!

இவர்தான் விஜயகாந்த் நடித்த ரமணா கேரக்டரில் புத்திசாலித்தனமாக துப்பறிந்து விஜயகாந்த் தான் குற்றவாளி என்பதை கண்டுபிடிப்பார். நடிகர் யூகிசேது சமீபத்தில் வெளியான சர்தார் என்ற திரைப்படத்தில் கூட ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

மேலும் உங்களுக்காக...