கே.பாலசந்தர் படத்தில் அறிமுகம்.. கமல் ரஜினியுடன் நடிப்பு.. நடிகர் திலீப் திரை பயணம்..!

தமிழ் திரை உலகில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தாலும் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காமல் இருக்கும் நடிகர்கள் ஏராளம். அந்த வகையில் கமல் ரஜினி உள்பட பல பிரபலங்களுடன் நடித்தவர் தான் திலீப்.

நடிகர் திலீப் சென்னையை சேர்ந்தவர். சிறுவயதில் பள்ளியில் படிக்கும்போதே அவருக்கு கலையில் ஆர்வம் உண்டு. அதனால் அவர் நடனம் நடிப்பு ஆகியவற்றை பயின்றார். பள்ளி கலை நிகழ்ச்சிகளில் அவர் ஆர்வத்துடன் கலந்து கொண்ட நிலையில் சென்னை கல்லூரியில் பட்டம் முடித்த பின்னர் அவர் நாடகத்தில் இணைந்து சின்ன சின்ன கேரக்டர்களின் நடித்தார்.

இந்த நிலையில் தான் அவரது நாடகத்தை பார்க்க வந்த கே.பாலச்சந்தர் தனது வறுமையின் நிறம் சிவப்பு என்ற படத்தில் நடிக்க அவரை ஒப்பந்தம் செய்தார். இந்த படத்தில் கமல்ஹாசன் மற்றும் எஸ்வி சேகர் நண்பராக அவர் நடித்திருப்பார். அவரது நடிப்பு முதல் படமா என்று தெரியாத அளவுக்கு அசத்தலாக இருந்தது.

பாரதிராஜாவின் என் உயிர் தோழன்… பாராட்டப்பட்ட மறைந்த நடிகர் பாபுவின் நடிப்பு..!!

வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் கிடைத்த புகழ் காரணமாக அதனை அடுத்து அவர் ரயில் பயணங்களில், கிளிஞ்சல்கள், நினைவெல்லாம் நித்யா, ஓம் சக்தி உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். மீண்டும் கமலுடன் இணைந்து தூங்காதே தம்பி தூங்காதே என்ற படத்தில் அவர் சிறப்பாக நடித்தார்.

images 67

சிவாஜி கணேசன் கேஆர் விஜயா நடித்த படிக்காத பண்ணையார் என்ற திரைப்படத்தில் தேங்காய் சீனிவாசனின் மகன்களில் ஒருவராக நடித்திருப்பார். திலீப்பின் நடிப்பு திறமையை மிக சரியாக பயன்படுத்திக் கொண்டவர் என்றால் அவர் இயக்குனர் விசு என்று சொல்லலாம்.

மோகனுடன் அறிமுகம்.. ரஜினியின் நாயகி.. புற்றுநோயால் மரணம்.. நடிகை ஜோதியின் அறியப்படாத தகவல்..!

சம்சாரம் அது மின்சாரம் என்ற திரைப்படத்தில் இளவரசியின் கணவராக நடித்த திலீப் அதன்பிறகு பெண்மணி அவள் கண்மணி உள்பட விசுவின் பல திரைப்படங்களில் நடித்தார். கார்த்திக் உடன் சொல்ல துடிக்குது மனசு, பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான புதுப்புது அர்த்தங்கள், ரஜினியுடன் மாப்பிள்ளை, தர்மதுரை, உள்பட பல திரைப்படங்கள் நடித்தார்.

1996 ஆம் ஆண்டு பிறகு அவருக்கு நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனை அடுத்து கிட்டத்தட்ட திரையுலகில் இருந்து விலகினார். இந்த நிலையில் தான் ஐந்து ஆண்டுகளுக்கு கழித்து எஸ்வி சேகர் நடித்த சிகாமணி ரமாமணி என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நடித்ததோடு அதன் பிறகு அவர் திரையுலகில் நடிப்பை தொடரவில்லை.

நடிகர் திலீப், ஹேமா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருந்தனர். தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அவர் சென்னையில் இருந்து மைசூருக்கு குடியேறினார். அங்கு அவர் தனது குடும்பத்தினருடன் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் தான் திடீரென 2012 ஆம் ஆண்டு அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2012 மே மாதம் காலமானார்.

1500 திரைப்படங்கள்.. 14 மொழிகள்.. நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் திரையுலக சாதனை..!

நடிகர் திலிப் 56 வயதில் மறைந்தாலும் அவர் நடித்த படங்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...