ஹீரோ ஆன உடனே வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட யூடியூபர் டிடிஎப் வாசன்! ஆப்பு தேவையா…

Published:

அதி வேகமாக பைக் ஓட்டி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு பிரபலமானவர் தான் யூடியூபர் டிடிஎப் வாசன். அவர் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்திவருகிறார். இவருக்கு இலட்சக்கணக்கில் பாலோவர்ஸ் உள்ளனர். யூடியூப்பில் கிடைத்த பிரபலத்தின் மூலம் இவர் தற்போது சினிமாவில் நாயகனாக டிடிஎப் வாசன் முன்னேறி உள்ளார்.

டிடிஎப் வாசன் பிறந்தநாள் முன்னிட்டு அவர் நடித்து வரும் படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதே நேரத்தில் பிறந்த நாளில் தன்னுடைய ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தன்னுடைய புது படத்திற்கு ஆதரவு தரும்படி கேட்டுக் கொண்ட டிடி எப் வாசன் தற்போது தான் நடிக்கும் படத்தின் பூஜை நடந்து வந்தது என தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாக தான் இந்த வருடம் ரசிகர்களை தன்னால் சந்திக்க முடியவில்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை சினிமாவில் நாயகனாக நடிக்கும் அளவிற்கு உயர்த்திய அனைவருக்கும் தன்னுடைய நன்றியை அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்

டிடிஎப் வாசன் நடிக்கும் படத்திற்கு மஞ்சள் வீரன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்த திரைப்படத்தை செல்லம் என்பவர் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் நேற்று படத்தின் பூஜை நடந்த பிறகு படத்தின் இயக்குனர் செல்லம் மற்றும் நாயகன் டிடிஎஃப் வாசன் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அந்த நேரத்தில் பத்திரிகையாளர் ஒருவர், செல்லும் இடம் எல்லாம் என் ரசிகர்களுக்கு தகவல் அளித்து கூட்டத்தை தேவையில்லாமல் எதற்காக கூட்டுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். இதற்கு தான் அவ்வாறு செய்யவில்லை என டிடிஎஃப் வாசன் கூற, தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும் அதனை காண்பிப்பதாகவும் செய்தியாளர் மீண்டும் கூறினார்.

ப்ளு சட்டை மாறனை வலைவீசி தேடி வரும் நெட்டிசன்கள்! ஓடி ஒளிய காரணம் என்ன?

இதன் காரணமாக சற்று நிதானம் இழந்த டிடிஎப் வாசன் ஆதாரம் இருந்தால் காட்டுங்கள் என தெரிவித்தார். உடனே செய்தியாளருக்கும் டிடிஎஃப் வாசனுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.

இந்த நிலையில் படத்தின் இயக்குனர் படத்தைப் பற்றி மட்டுமே கேள்விகளை கேளுங்கள் என்றும் தேவையற்ற கேள்விகள் வேண்டாம் என தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிடிஎஃப் வாசனை ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் உங்களுக்காக...