ப்ளு சட்டை மாறனை வலைவீசி தேடி வரும் நெட்டிசன்கள்! ஓடி ஒளிய காரணம் என்ன?

புதிய திரைப்படங்கள் வெளியானவுடன் அதனை ரிவ்யூ செய்யும் ப்ளூ சட்டை மாறன், மாமன்னன் படத்திற்கு ஏன் இதுவரை ரிவ்யூ செய்யவில்லை என்று நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து வெளியான படம் மாமன்னன். இந்த படம் நேற்று வெளியாகி தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தில் உதயநிதியின் அப்பா கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்துள்ளார். மேலும் கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் என பல முன்னணி நட்ஷத்திரங்கள் இனைந்து நடித்துள்ளனர். ஏ.ஆர் ரஹ்மான் இசையில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் படத்தை தயாரித்துள்ளது.

தமிழகத்தில் மட்டும் சுமார் 600 திரையரங்குகளில் மாமன்னன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மாமன்னன் படம் வெளியானது முதல் இந்த படம் குறித்து ரசிகர்கள் தங்களது கருத்துக்களை டுவிட்டர் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.இந்த படத்தை பார்த்த ரஜினி , தனுஷ் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் படத்தை பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர்கள் வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்டோரையும் ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில் புதிய திரைப்படங்கள் வெளியானவுடன் அந்த படம் குறித்து வெளிப்படையாக விமர்சனம் செய்பவர் தான் ப்ளூ சட்டை மாறன். அவர் செய்யும் விமர்சனமத்திற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவருடைய விமர்சனத்தை கேட்ட பின்பு தான் படம் பார்க்க திரையரங்கிற்கு செல்லும் ரசிகர்களும் உள்ளனர்.

இந்நிலையில் மாமன்னன் படம் வெளியாகி பல மணி நேரங்கள் ஆகியும் சட்டை மாறன் வாய் திறக்கவில்லை.

எடை குறைப்பால் ட்ரோல் .. நெகட்டிவ் விமர்சனங்களை மீறி சாதனை செய்யும் கீர்த்தி சுரேஷ்..!

இந்த படம் குறித்து இதுவரை எந்த விமர்சனத்தையும் முன் வைக்காததால் அவரது விமர்சனத்திற்காக ஏராளமான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மாமன்னன் படத்தை ப்ளூ சட்டை மாறன் இதுவரை பார்க்கவில்லையோ என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...