உதயநிதியின் மாமன்னன் படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா? சாதனை படைத்த படம்…

Published:

மாமன்னன் படத்திற்கு நேற்று எதிர்பார்த்ததை விட நல்ல ஓப்பனிங் கிடைத்த நிலையில் படத்தின் முதல் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, லால், சுனில், பகத் பாசில் பலரும் நடித்துள்ள படம் மாமன்னன். இந்த படம் நேற்று வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்திற்கு இசையமைத்துள்ள ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசைக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.

மேலும் உதயநிதி ஸ்டாலினுக்கு இது கடைசி படம் என்பதாலும் பரியேறும் பெருமாள் இயக்குனரின் படம் என்பதாலும் பெரும் எதிர்பார்ப்பு படத்திற்கு இருந்தது. மாமன்னன் படத்திற்கு நேற்று எதிர்பார்த்ததை விட நல்ல ஓப்பனிங் இருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு இதற்கு முன்பு இப்படி ஒரு ஓப்பனிங் வந்தது இல்லை எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

ஹீரோ ஆன உடனே வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட யூடியூபர் டிடிஎப் வாசன்! ஆப்பு தேவையா…

இந்த நிலையில் இந்த படம் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் 10 கோடிக்கு மேல் உலக அளவில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வார இறுதி என்பதால் மேலும் வசூல் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...