நம்ம ஆளுங்க ஒன்னுனா ஒன்பதுனு சொல்லிடறாங்க… யோகி பாபு கொடுத்த விளக்கம்…

யோகி பாபு தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நகைச்சுவை நடிகர் மற்றும் நடிகர் ஆவார். ஆரம்பத்தில் யோகி பாபு விஜய் டிவியில் லொள்ளு சபாவில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். 2009 ஆம் ஆண்டு யோகி…

yogi babu

யோகி பாபு தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நகைச்சுவை நடிகர் மற்றும் நடிகர் ஆவார். ஆரம்பத்தில் யோகி பாபு விஜய் டிவியில் லொள்ளு சபாவில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். 2009 ஆம் ஆண்டு யோகி என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். அன்று முதல் தனது பெயரை யோகி பாபு என்று வைத்துக்கொண்டார்.

தொடர்ந்து பையா, கலகலப்பு, பட்டத்து யானை போன்ற திரைப்படத்தில் நடித்தார். அதற்கடுத்ததாக ஷாருக்கான் உடன் இணைந்து சென்னை எக்ஸ்பிரஸ் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து பிரபலமானார் யோகி பாபு. பின்னர் மான் கராத்தே, காக்கா முட்டை, கிருமி போன்ற திரைப்படங்களில் நடித்து நகைச்சுவை நடிகராக மாறினார் யோகி பாபு.

2018 ஆம் ஆண்டு கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகராக நடிக்க ஆரம்பித்தார் யோகி பாபு. அதை தொடர்ந்து மண்டேலா, கூர்கா, குலேபகாவலி போன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார் யோகி பாபு. இது தவிர முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றி திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக தோன்றியிருக்கிறார் யோகி பாபு.

தற்போது பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வரும் யோகி பாபு ஒரு நேர்காணலில் தன்னை பற்றிய வதந்திகளுக்கு விளக்கம் அளித்திருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், நான் ஜம்மு காஷ்மீரில் படித்தேன் வளர்ந்தேன் என்று கூறுகிறார்கள். அப்படி எதுவுமே இல்லை. என்னுடைய அப்பா மிலிட்டரியில் வேலை செய்ததால் ஒரு இரண்டு மூன்று மாதம் ஜம்மு காஷ்மீருக்கு சென்று வந்தோம் அவ்வளவுதான். நான் படித்தது எல்லாமே ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் ஜேஜே அரசு பள்ளியில் தான். நம்ம ஆளுங்க தான் ஒன்னுனா ஒன்பதுன்னு சொல்லிடறாங்க என்று விளக்கம் அளித்திருக்கிறார் யோகி பாபு.