சமுத்திரக்கனி தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான இயக்குனர் மற்றும் நடிகராவார். ஆரம்பத்தில் இயக்குனர் கே பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் சமுத்திரக்கனி. 2003 ஆம் ஆண்டு உன்னை சரணடைந்தேன் படத்திற்காக வசனம் எழுதி சிறந்த கதை வசனத்திற்கான தமிழ்நாடு திரைப்பட விருதினை வென்றார். 2009 ஆம் ஆண்டு நாடோடிகள் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் சமுத்திரக்கனி.
தொடர்ந்து போராளி, அப்பா, சாட்டை போன்ற திரைப்படங்களை இயக்கினார் சமுத்திரக்கனி. இவரது படங்களில் நல்ல சமூகத்துக்கு தேவையான கதையம்சங்கள் இருக்கும். இயக்குவது மட்டுமல்லாமல் நடிகராக எண்ணற்ற படங்களில் நடித்து புகழ்பெற்றிருக்கிறார் சமுத்திரக்கனி. சாட்டை திரைப்படத்தில் இவர் ஆசிரியராக நடித்தது மிகப் பிரபலமாக பேசப்பட்டது. அதுமட்டுமில்லாமல் சுப்பிரமணியபுரம், ஈசன், நீர்பறவை, வேலையில்லா பட்டதாரி, ரஜினி முருகன் போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார் சமுத்திரக்கனி. சில திரைப்படங்களில் வில்லன் நடிகராகவும் நடித்திருக்கிறார்.
நடிப்பு இயக்கத்தையும் தாண்டி பின்னணி குரலும் சில திரைப்படங்களுக்கு கொடுத்திருக்கிறார் சமுத்திரக்கனி. தற்போது பிஸியாக பல மொழிகளில் நடித்து வருகிறார் சமுத்திரக்கனி. இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட சமுத்திரக்கனி சோசியல் மீடியாவை பற்றி கொந்தளித்து பேசியிருக்கிறார்.
சமுத்திரக்கனி கூறியது என்னவென்றால், தற்போதைய சோசியல் மீடியா கழிப்பறை போல் ஆகிவிட்டது. எல்லோரும் எல்லாவற்றையும் அதிலே தான் வந்து கொட்டுகிறார்கள். நான் காலை அரை மணி நேரம் மாலை அரை மணி நேரம் மட்டுமே சமூக வலைத்தளத்தை பார்ப்பேன். எல்லோரும் இது போல் சமூக வலைத்தளத்தில் இருந்து விலகி இருப்பது நல்லது என்று தான் நான் நினைப்பேன். ஏனென்றால் சமூக வலைத்தளங்கள் மூலமாக 10% மட்டுமே நல்லது நடக்கிறது மீதி 90% கெட்டவைகள் தான் நடக்கிறது. ஏன் இன்றைய சோசியல் மீடியா இப்படி ஆகிவிட்டது என தெரியவில்லை என்று கொந்தளித்து பேசியிருக்கிறார் சமுத்திரக்கனி.