இசைப்புயல், வைகைப்புயல் என்ற பட்டங்களுக்குக் காரணம் யார் தெரியுமா? அட அவரா?

தமிழ்நாடு இதுவரை எத்தனையோ புயல்களை சந்தித்துள்ளது. சினிமா உலகம் சந்தித்தது 2 புயல்கள். ஒண்ணு. இசைப்புயல் ஏஆர்.ரகுமான். இன்னொன்னு வைகைப்புயல் வடிவேலு. ஏஆர்.ரகுமான் இளையராஜாவை மாதிரி கிராமிய இசையைத் தர முடியுமான்னு எல்லாரும் கேட்டாங்க.…

vadivelu, ar rahman

தமிழ்நாடு இதுவரை எத்தனையோ புயல்களை சந்தித்துள்ளது. சினிமா உலகம் சந்தித்தது 2 புயல்கள். ஒண்ணு. இசைப்புயல் ஏஆர்.ரகுமான். இன்னொன்னு வைகைப்புயல் வடிவேலு. ஏஆர்.ரகுமான் இளையராஜாவை மாதிரி கிராமிய இசையைத் தர முடியுமான்னு எல்லாரும் கேட்டாங்க.

அதே நேரம் பாரதிராஜா ஏஆர்.ரகுமான் மீது உறுதியான நம்பிக்கை வைத்து இருந்தார். அது சிறிதும் பொய்த்து விடாத வகையில் பட்டையைக் கிளப்பினார் ஏஆர்.ரகுமான்.

அந்தப் படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாயின. இந்தப் படத்தில் நடித்த வைகைப்புயல் வடிவேலுவின் நடிப்பும் சூப்பராக இருந்தது. பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பினார் வடிவேலு. இந்தப் படத்துக்குப் பிறகு ஏஆர்.ரகுமானுக்கு இசைப்புயல் என்றும், வடிவேலுவுக்கு வைகைப்புயல் என்றும் பெயர் வந்தது என்றால் அது என்னாலதான் என்று பத்திரிகை பேட்டி ஒன்றில் பாரதிராஜா சொன்னாராம். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.

bharathiraja

1993ல் பாரதிராஜா இயக்கிய சூப்பர்ஹிட் கிராமிய படம் கிழக்கு சீமையிலே. விஜயகுமார், ராதிகா, நெப்போலியன், விக்னேஷ், பாண்டியன், வடிவேலு உள்பட பலர் நடித்துள்ளனர். சுஜாதா, விஜயா, எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் எல்லாமே சூப்பர். மானூத்து மந்தையிலே, ஆத்தங்கர மரமே, எதுக்கு பொண்டாட்டி, அப்புறம் கிழக்குச் சீமையிலே நான், கத்தாழக் காட்டு வழி… ஆகிய பாடல்கள் உள்ளன.

படத்தில் வரும் பாடல்களைக் கேட்கும்போது இதெல்லாம் ஏஆர்.ரகுமான் மியூசிக்கா என கேட்கும் வகையில் இருந்தது. கிராமியப் பாடல்களிலும் பட்டையைக் கிளப்பினார்.