மைக்ரோசாஃப்ட் 365 பயன்படுத்துபவர்கள் பலரும் கடந்த சில மணி நேரங்களாக பெரும் குழப்பத்திலும், அதிருப்தியிலும் இருக்கிறார்கள். காரணம், அவுட்லுக், டீம்ஸ் போன்ற முக்கிய செயலிகள் சரியாக வேலை செய்யவில்லை!
நேற்று மாலை 6:30 மணியளவில் ஆரம்பித்த இந்த பிரச்சனைகளால், டவுன்டிடெக்டர் தளத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்துள்ளன. இதில் பெரும்பாலானவை அவுட்லுக் பற்றிய புகார்கள்தான். உள்நுழைவதில் 23% பேரும், பொதுவாக இணையதளத்தில் 22% பேரும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.
பயனர்கள் தங்கள் கோபத்தையும், விரக்தியையும் சமூக வலைத்தளங்களில் கொட்டி தீர்த்து வருகின்றனர். ஒருவர், “இது என்ன புதுசா இருக்கு… அவுட்லுக்குக்கு மெமரி லீக் ஆயிடுச்சு போல, அதை நான் க்ளோஸ் பண்றதுக்குள்ள 5GB RAM வரைக்கும் இழுத்துக்கிடுச்சு!” என்று புலம்பியுள்ளார்.
மற்றொருவர், காலி திரையின் வீடியோவைப் பகிர்ந்து, “நான் ஆண்ட்ராய்டு அவுட்லுக் பயன்படுத்தும்போது ஏன் இப்படி ஆகுது? தயவுசெஞ்சு சொல்லுங்க?” என்று கேட்டுள்ளார்.
“ஓ மை காட்! மைக்ரோசாஃப்ட் வேர்ட்னா எனக்கு சுத்தமா பிடிக்கல!!!! இது எப்பவுமே இவ்வளவு மோசமாத்தான் இருந்ததா?” என்று ஒருவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். யானைக்கும் அடி சறுக்கும், மைக்ரோசாஃப்டிலும் பிரசனை வரும் என இன்னொருவர் பதிவு செய்துள்ளார்.
இந்தச் சிக்கல்களை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. “எங்களுக்குச் சிக்கல்கள் இருக்கிறது, ஆனா நாங்கள் சரி செய்து வருகிறோம் ” என்று அப்டேட்டை பகிர்ந்துள்ளனர். தங்கள் சேவைகளை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர, தீவிரமாக வேலை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பும் கூட மைக்ரோசாஃப்ட் அவுட்லுக் சம்பந்தமாக இதே போன்ற பிரச்சனைகளை சந்தித்திருக்கிறது. உதாரணமாக, புதிய மின்னஞ்சலை திறக்கும்போது அல்லது தொடங்கும்போதே கிளாசிக் அவுட்லுக் க்ராஷ் ஆகும் பிரச்சனை ஒன்று முன்னர் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.